பிறந்த நாளில் சாய் பல்லவிக்கு அடித்த லக்..கமல் கொடுத்த சூப்பர் சர்ப்ரைஸ்..

Kanmani P   | Asianet News
Published : May 09, 2022, 07:26 PM IST

கமல் தயாரிப்பில் சிவகார்த்திகேயன் நடிக்கவுள்ள 21 வது படத்தில் நடிகை சாய் பல்லவி இணைந்துள்ளதாக தற்போது அறிவிப்பு வெளியாகியுள்ளது.

PREV
18
பிறந்த நாளில் சாய் பல்லவிக்கு அடித்த லக்..கமல் கொடுத்த சூப்பர் சர்ப்ரைஸ்..
don

டாக்டர் வெற்றியைத் தொடர்ந்து தற்போது சிவகார்த்திகேயன் டான் படத்தில் நடித்து முடித்துள்ளார்.  சிபி சக்கரவர்த்தி இயக்கியுள்ள இந்த படம் வருகிற மே 13ஆம் தேதி திரைக்கு வரவுள்ளது.

28
don

கல்லூரி மாணவனாக சிவகார்த்திகேயன் நடித்துள்ள இந்த படத்தில் பிரியங்கா மோகனன், எஸ் ஜே சூர்யா, சிவாங்கி உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

38
Sivakarthikeyan

இந்த படத்தை அடுத்து தெலுங்கிலும் ஒரு படத்தில் கமிட்டாகி  உள்ளார்  சிவகார்த்திகேயன், டோலிவுட் இயக்குனர் அனுதீப் இயக்கும் இந்த படம் தமிழ், தெலுங்கு என இரு மொழிகளில் உருவாகி வருகிறது.

48
sk 2o

சிவகார்த்திகேயனின் 20 வது படமான இதில் சத்யராஜ் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். அதோடு இதில் நாயகியாக உக்ரைன் நாட்டை சேர்ந்தமரியா ரபோஷப்கா நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.

58
sk 21

இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதை அடுத்து சிவகார்த்திகேயன் கமல்ஹாசனின் தயாரிப்பில் ஒரு படத்தில் நடிக்க உள்ளார். ராஜ்குமார் பெரியசாமி என்பவர் இயக்கும் இந்த படத்தை  ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் தயாரிக்க உள்ளது இந்த அறிவிப்பினை சமீபத்தில் சிவகார்த்திகேயன், கமல் இருவரும் கூட்டாக அறிவித்திருந்தனர்.

68
sk 21

சிவகார்த்திகேயனின் 21 வது படமான இதில் தேசபக்தி அதிகமாக இருக்கும் என்றும், இந்த படம்  பெரிய பட்ஜெட்  பான் இந்தியா படமாக வெளியாக உள்ளதாக சமீபத்தில் தகவல் வெளியாகி இருந்தது.இந்த படத்தில் நடிக்கவுள்ள நடிகர் நடிகைகள் குறித்து அதிகாரப்பூர்வ தகவல் எதுவும்  வெளியாகமல் இருந்தது.

78
sk 21

இந்நிலையில் புதிய அப்டேட் ஆக சிவகார்த்திகேயன் இருபத்தி ஒன்றாவது படத்தில் இணைய உள்ள நாயகி குறித்த கூட் அப்டேட் வெளியாகியுள்ளது. இதன் தயாரிப்பு நிறுவனமான ராஜ்கமல் பிலிம்ஸ் இண்டர்நேஷனல் வெளியிட்டுள்ளது.

88
sk 21

அதாவது தனுஷின் மாரி 2 படத்தில் நாயகியாக நடித்து தமிழ் ரசிகர்களை வெகுவாக கவர்ந்து இருந்த ரவுடிபேபி சாய்பல்லவி தான் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நடிக்க உள்ளவர். சாய்பல்லவி பிறந்த நாளான இன்று இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.

Read more Photos on
click me!

Recommended Stories