
Raanav Shared VJ Vishal's Secrets in Bigg Boss Tamil Season 8 : விஜய் சேதுபதி தொகுத்து வழங்கி வரும் பிக் பாஸ் தமிழ் சீசன் 8 நிகழ்ச்சியானது நாளை 19ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமையுடன் முடிவடைகிறது. வைல்டு கார்டு உள்பட 24 போட்டியாளர்களுடன் தொடங்கப்பட்ட பிக் பாஸ் தமிழ் சீசன் 8 நிகழ்ச்சியானது இப்போது டாப் 5 போட்டியாளர்கள் வரை வந்து நிற்கிறது. இதில், ராயன் டிக்கெட் டூ ஃபினாலே மூலமாக இறுதிப் போட்டிக்கு சென்றார். நாளை நடைபெறும் இறுதிப் போட்டியை பிரம்மாண்டமாக நடத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.
இப்போ தான் ஆரம்பித்த மாதிரி இருந்தது, அதுக்குள்ள முடிய போகிறதா என்று வருத்தம் ஒருபக்கம் இருந்தாலும் டைட்டில் வின்னர் யார் என்று தெரிந்து கொள்வதில் அதிக ஆவலும் எதிர்பார்ப்பும் ஏற்பட்டுள்ளது. பிக் பாஸ் தமிழ் சீசன் 8 இறுதிப் போட்டியாளர்களின் பட்டியலில் ரயான், விஷால், முத்துக்குமரன், பவித்ரா மற்றும் சவுந்தர்யா ஆகிய 5 போட்டியாளர்கள் இடம் பெற்றுள்ளனர். இதில், 5, 4, 3 (இடங்களின் வரிசை) என்று போட்டியாளர்கள் நாளை வெளியேற்றப்படுவார்கள் என்று தெரிகிறது. எஞ்சிய 2 போட்டியாளர்களில் ஒருவர் டைட்டில் வின்னராக அறிவிக்கப்படுவார்.
கடந்த அக்டோபர் 6ஆம் தேதி கோலாகலமாக தொடங்கிய பிக் பாஸ் தமிழ் சீசன் 8 நிகழ்ச்சியானது ஆரம்பத்தில் 18 பேருடன் தொடங்கினாலும் வைல்டு கார்டு மூலமாக 6 போட்டியாளர்கள் எண்ட்ரி கொடுத்தனர். இந்த நிலையில் தான் இறுதிப் போட்டிக்கு முன் வைக்கப்பட்ட கேஷ் பாக்ஸ் டாஸ்கில் ஜாக்குலின் வெளியேற்றப்பட்டார். இந்த டாஸ்கில் முத்துக்குமரன் (ரூ.50 ஆயிரம்), பவித்ரா (ரூ.2 லட்சம்), ராயன் (ரூ.2 லட்சம்) மற்றும் விஷால் (ரூ.5 லட்சம்) ஆகியோர் வெற்றி பெற்றனர்.
இந்த நிலையில் தான் நேற்று நடைபெற்ற ரீ வைண்ட் டாஸ்கில் பிக் பாஸ் வீட்டில் இதுவரையில் போட்டியாளர்களுடக்கிடையில் இருந்த அன்பு மற்றும் நட்பு பற்றிய வீடியோவையும், போட்டியாளர்களிடையே நடைபெற்ற சண்டையையும் பிக் பாஸ் வீடியோ மூலமாக வெளிக்காட்டினார்.
இதையடுத்து பிக் பாஸ் வீட்டிலிருந்து வெளியேறிய பிறகு மீண்டும் வீட்டிற்குள் வந்த போட்டியாளர்களில் ஒருவரான ராணவ் இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்ற டாப் 5 போட்டியாளர்கள் பற்றி பேசினார். அதில், பவித்ராவின் திறமை, போராடும் குணம், கேம் ஸ்பிரிட், நம்பிக்கையை பற்றி பேசினார். இதையடுத்து முத்துக்குமரனை கிங் ஆஃப் பிக் பாஸ் என்றும், சிறப்பாக விளையாடுவதாகவும் குறிப்பிட்டார். ரயானை சிறந்த ஆட்டக்காரன் என்றார். சவுந்தர்யாவின் ரீச் வேற மாதிரி இருக்கு. எல்லோருக்கும் அவரை பிடிச்சிருக்கு. குழந்தைகள் எல்லோரையும் பிடித்துவிட்டதாக சொன்னார்.
கடைசியாக விஷால் பற்றி முக்கியமான விஷயத்தை பகிர்ந்து கொண்டார். அதில், இந்த வயதிலேயே அவர் பல உதவிகளை செய்து வருகிறார். பெண் குழந்தைகளை படிக்க வைப்பதோடு, நிறைய பேருக்கு டிரெஸ் எடுத்து கொடுத்துக் கொண்டிருக்கிறார். இதெல்லாம் அவர்களுக்கு தெரியாமல் அவர் செய்து கொண்டிருக்கிறார் என்று பேச சக போட்டியாளர்கள் கை தட்டி உற்சாகம் செய்தார். மேலும், ஒரு வருடத்திற்கான படிப்பு செலவு, டிரெஸ் செலவு என்று எல்லாவற்றையும் அவர் கவனித்துக் கொள்கிறார் என்ரார். நிறைய பேருக்கு இன்னும் பெருசாக பண்ண வேண்டும் என்று வாழ்த்தினார்.
இதற்கு பதிலளித்த விஷால் அவன் சொன்னதற்கு நன்றி, நான் யாருக்கு செய்கிறேனோ அவர்களுக்கு இதுனால் வரையிலும் நான் செய்யும் உதவி தெரியாது. நான் சொன்னால் அவர்களுக்கு தெரியவே தெரியாது என்று குறிப்பிட்டார். தனது வாழ்நாள் முழுவதும் தன்னால் முடிந்த உதவிகளையும் செய்து தர வேண்டும் என்று கூறினார் என்பது குறிப்பிடத்தக்கது.