காத்து வாங்கும் 'கேம் சேஞ்சார்'; 'மத கஜ ராஜா' வெற்றிக்கு முன் மண்ணை கவ்விய சோகம்!

First Published | Jan 18, 2025, 11:17 AM IST

இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் பொங்கல் ரிலீசாக வெளியான கேம் சேஞ்சர் திரைப்படம் திரையரங்கில் காத்து வாங்கிக்கொண்டிருக்கும் நிலையில், இதன் முதல் வார வசூல் விவரம் தற்போது வெளியாகியுள்ளது.
 

Director Shankar

பிரமாண்ட இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் 'இந்தியன் 2' திரைப்படத்தின் தோல்விக்கு பின்னர் பொங்கல் விருந்தாக ரிலீஸ் ஆன திரைப்படம் தான் 'கேம் சேஞ்சர்'. ஆனால் இந்த படம் இவருக்கு இரண்டாவது தோல்வி படமாக மாறியுள்ளதாக திரைப்பட விமர்சகர்கள், தங்களின் கருத்தை தெரிவித்து வருகிறார்கள்.
 

Game Changer Collection

கடந்த ஆண்டு இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் வெளியான 'இந்தியன் 2' திரைப்படம், மிகப்பெரிய எதிர்பார்ப்புக்கு மத்தியில் வெளியான போதும், அதிக விமர்சனங்களுக்கு ஆளானது. இயக்குனர் ஷங்கரின் டச் இப்படத்தில் மிஸ் ஆகிவிட்டதாக ஆதங்கத்தை கொட்டி தீர்த்தனர் ரசிகர்கள். குறிப்பாக முதல் முதல் பாகத்துடன் ஒப்பிட்டு இந்த படத்தின் விமர்சனம் வெளியானதே... இந்த படத்தின் தோல்விக்கு காரணம் என கூறப்பட்டது. காரணம், முதல் படத்தை விட, இரண்டாவது பாகத்தில் இயக்குனர் ஷங்கர் பல சமூக பிரச்சனைகளை பேசி இருந்தார். அதே நேரம் வர்ம கலையால் இப்படி எல்லாம் செய்ய முடியுமா? என்றும் யோசிக்க வைத்தார்.

4 வயது மகன் தான் முதல் இலக்கு; சைஃப் அலிகான் தாக்கப்பட்டதன் அதிர்ச்சி பின்னணி - பரபரப்பு வாக்குமூலம்!
 

Tap to resize

Ram charan Acting Game Changer

'இந்தியன் 2' -வில் மிஸ் ஆனா வெற்றியை,கேம் சேஞ்சர் மூலம் பிடித்து விடுவார் என எதிர்பார்க்கப்பட்டது. அதன்படி,  இப்படம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஜனவரி 10ஆம் தேதி ரிலீஸ் ஆகும் என அறிவிக்கப்பட்டது. பான் இந்தியா படமாக சுமார் 350 முதல் 400 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட இந்த திரைப்படம், ஒரு வாரத்தில், ரூ. 120 கோடி மட்டுமே வசூல் செய்துள்ளதாக சானிக் இணையதளம் தெரிவித்துள்ளது. தியேட்டர்களில் படம் காத்து வாங்க துவங்கி விட்டதால், இனிவரும் நாட்களில் போட்ட தொகையை எடுப்பது கடினம் என்றே கூறப்படுவதால், இந்த திரைப்படமும் இயக்குனர் ஷங்கருக்கு மிகப்பெரிய தோல்வி படமாக மாறி உள்ளது.

Game Changer

இந்த படத்தில், ராம் சரணுக்கு ஜோடியாக பாலிவுட் நடிகை கியாரா அத்வானி நடித்துள்ளார். மேலும் அஞ்சலி, யோகி பாபு, சமுத்திரகனி, உள்ளிட்ட பலர் முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர். கார்த்திக் சுப்புராஜ் இந்த படத்தின் கதையை எழுதி உள்ளார். ஆரம்பத்தில் இருந்தே கலவையான விமர்சனங்களை இந்த படம் பெற்று வந்தது குறிப்பிடத்தக்கது.

பிரபல தயாரிப்பாளர் டி.எம்.ஜெயமுருகன் மாரடைப்பால் மரணம்!
 

Madha Gaja Raja Collection

ஆனால் கேம் சேஞ்சருக்கு போட்டியாக, சுந்தர் சி இயக்கத்தில், விஷால் நடிப்பில் 12 ஆண்டுகளுக்கு முன் எடுக்கப்பட்டு ரிலீஸ் ஆன, மத கத ராஜா திரைப்படம் வெறும் ரூ.15 கோடியில் எடுக்கப்பட்டு, 5 நாட்களிலேயே 34 கோடி வசூல் செய்துள்ளது. இதன் மூலம் போட்ட தொகையை விட டபுள் மடங்கு வசூலை வாரி குவித்துள்ளது. பட்ஜெட்டுடன் ஒப்பிடும் போது, 'மத கத ராஜா' முன் கேம் சேஞ்சர் மண்ணை கவ்வியதாகவே பார்க்க படுகிறது.
 

Latest Videos

click me!