பவர் வாக்கிங் என்றால் என்ன? அதன் ஆரோக்கிய நன்மைகள் பற்றி தெரியுமா!

First Published | Jan 18, 2025, 12:57 PM IST

நடைப்பயிற்சியில், ஒரு பகுதியாக இருக்கும் பவர் வாக்கிங் என்றால் என்ன? அதை எப்படி மேற்கொள்வது மற்றும் அதன் ஆரோக்கிய நன்மைகள் பற்றி இந்த பதிவில் பார்ப்போம்.
 

Benefits of Walking

அணைத்து வயதினரும் நடைபயிற்சி தினமும் செய்வது அவர்களின் ஆரோக்கியத்திற்கு மிகவும் சிறந்தது என மருத்துவர்கள் தொடர்ந்து அறிவுறுத்தி வருகிறார்கள். ஹவுஸ் மேக்கிங் பெண்கள், ஒரே இடத்தில் அமர்ந்து வேலை செய்யும் பெண்கள், 50 வயதை எட்டியவர்கள் கட்டாயம் உடல் பயிற்சி செய்ய தவறினாலும் ஒரு நாளைக்கு குறைந்தது 2000 நடைகள் நடக்க வேண்டும் இது அவர்களின் கால்களை வலுவாகும் கெட்ட கொழுப்பை எரிக்கும்.

walking

நீங்கள் தீவிரமான உடற்பயிற்சிகளைச் செய்யாமல், நடைபயிற்சிகளை மட்டும் மேற்கொள்பவராக இருந்தால், உங்களுக்கு பவர் வாக்கிங் சரியான தீர்வாக இருக்கும். பவர் வாக்கிங் பற்றிய முழு ஆரோக்கிய நன்மைகளை தெரிந்து கொள்வோம் வாங்க.

தாய்ப்பால் அதிகரிக்க செய்யும் 5 அற்புதமான உணவுகள்!

Tap to resize

Power Walking:

பவர் வாக்கிங்:

பவர் வாக்கிங், என்பது வழக்கமான நடைப்பயிற்சியின் நிதானமான வேகத்தைத் தாண்டி நடப்பது. இது உங்களுக்கு குறைந்த தாக்கம் கொண்ட உடற்பயிற்சியாக இருக்கும். வழக்கத்தை விட வேகமாக நடப்பது பல ஆரோக்கிய நன்மைகளுக்கு வழிவகுக்கிறது. 

Heart Health:

1. இருதய ஆரோக்கியம்:

பவர் வாக்கிங் இதய ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவுகிறத. இதய துடிப்பை அதிகரிக்கிறது மற்றும் பவர் வாக்கிங் இரத்த அழுத்தத்தைக் குறைக்கும். கெட்ட கொழுப்பைக் விரைவாக கரைகிறது. இதய நோய் மற்றும் பக்கவாதம் ஏற்படும் அபாயத்தைக் குறைக்கும் என கூறப்படுகிறது. 2013 ஆம் ஆண்டு நடத்தப்பட்ட ஆய்வின்படி , பவர் வாக்கிங் உயர் இரத்த அழுத்தம் , அதிக கொழுப்பு மற்றும் நீரிழிவு அபாயத்தைக் குறைக்கிறது என்று கண்டறியப்பட்டது .

வேகமாக கொழுப்பை குறைக்கும் 5 டேஸ்டி & ஹெல்த்தியான உணவுகள்!

Weight Loss

2. எடை இழப்பு:

சாதாரண நடைபயிற்சி கலோரிகளை எரிக்க உதவுகிறது. ஆனால் பவர் வாக்கிங் அதை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்லும். வேகமாக நடப்பதன் மூலம், குறைந்த நேரத்தில் அதிக கலோரிகள் மற்றும் கொழுப்பை நீங்கள் எரிக்கிறீர்கள். உடல் எடை விரைவில் குறையும். உங்கள் வேகம் மற்றும் உடல் எடையைப் பொறுத்து நீங்கள் ஒரு மணி நேரத்திற்கு சுமார் 200-300 கலோரிகளை எரிக்கலாம் என்று உடல்பயிற்சி நிபுணர்கள் கூறுகிறார்கள்.

Strength

3. வலிமை:

பவர் வாக்கிங் செல்வது, உங்கள் கால்கள், இடுப்பு மற்றும் தசைகளை வலிமையாக மாற்ற உதவுகிறது. நீங்கள் வேக வேகமாக நடப்பதால், உங்கள் தசைகளுக்கு ஒரு உடல்பயிற்சி போல் செயல்படுகிறது. 

தொங்கும் தொப்பை கரைய, எடை வேகமாக குறைய.. தினமும் காலை இதுல '1' சாப்பிடுங்க!

Mind Health:

4. மேம்படுத்தப்பட்ட மனநலம்:

பவர் வாக்கிங் எண்டோர்பின்களை வெளியிடுகிறது , இது ஒருவரின் மனநலத்தை மேம்படுத்தும் ஹார்மோன் ஆகும். இது ஒருவரின் மன அழுத்தம், பதட்டம் மற்றும் மனச்சோர்வைக் குறைக்க உதவும். உங்கள் மனதைத் தெளிவுபடுத்துவதற்கும் மனக் கவனத்தை மேம்படுத்துவதற்கும் இது ஒரு சிறந்த வழியாகும், குறிப்பாக வெளியில் புதிய காற்றும் இயற்கையும் மனநிலையை மேம்படுத்தும்.

Power Waling Benefit:

5. குறைந்த தாக்க உடற்பயிற்சி

"ஓடுவதை ஒப்பிடும்போது, ​​மூட்டுகளுக்கு பவர் வாக்கிங் எளிதானதாகும். இது மூட்டுவலி அல்லது மூட்டு பிரச்சினைகள் உள்ளவர்களுக்கு சிறந்த பயிற்சியாக அமைகிறது.  2002 ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட ஆய்வில், ஒவ்வொரு வாரமும் நான்கு நேரமாவது பவர் வாக்கிங் செய்வது, மாதவிடாய் நின்ற பெண்களில் இடுப்பு எலும்பு பலவீனமாகும் அபாயத்தை 41% குறைக்கிறது என்று கண்டறியப்பட்டது.

பூண்டு சீக்கிரம் முளைவிடாம ரொம்ப காலம் பயன்படுத்த சூப்பர் டிப்ஸ்!!

Latest Videos

click me!