ரூ.6 கோடி சம்பளத்துடன் வீடு தேடி வந்த விளம்பர பட வாய்ப்பு... ‘நோ’ சொல்லி திருப்பி அனுப்பிய அல்லு அர்ஜுன்

Published : Apr 20, 2022, 03:57 PM IST

Allu Arjun : பிரபல தெலுங்கு நடிகர் அல்லு அர்ஜுன், சமீபத்தில் முன்னணி நிறுவனத்தின் விளம்பரத்தில் நடிக்க மறுப்பு தெரிவித்துள்ளாராம். அந்த நிறுவனம் 6 கோடி ரூபாய் சம்பளம் தருவதாக கூறியும் நடிக்க மறுத்து விட்டாராம் அல்லு அர்ஜுன்.

PREV
14
ரூ.6 கோடி சம்பளத்துடன் வீடு தேடி வந்த விளம்பர பட வாய்ப்பு... ‘நோ’ சொல்லி திருப்பி அனுப்பிய அல்லு அர்ஜுன்

நடிகர், நடிகைகள் விளம்பரங்களில் நடிப்பதெல்லாம் தற்போது தமிழ்நாட்டில் படிப்படியாக குறைந்து வருகிறது. ஒரு காலத்தில் விளம்பரங்களில் நடித்து கலக்கிய விஜய், அஜித், கமல், சூர்யா போன்ற முன்னணி நடிகர்கள் தற்போது அதில் நடிப்பதை நிறுத்திவிட்டு படங்களில் கவனம் செலுத்து வருகின்றனர். அதற்கு பதிலாக சம்பந்தப்பட்ட நிறுவனத்தின் முதலாளிகளே விளம்பரங்களில் நடிப்பது தான் தற்போது இங்கு டிரெண்டாக உள்ளது. 

24

கோலிவுட்டில் டிரெண்ட் மாறினாலும், டோலிவுட், பாலிவுட் போன்ற திரையுலகைச் சேர்ந்த முன்னணி நடிகர்கள் இன்றளவும் விளம்பரங்களில் நடிப்பதை தொடர்ந்து வருகின்றனர். தெலுங்கில் அல்லு அர்ஜுன், மகேஷ் பாபு போன்ற நடிகர்களும், இந்தியில் அமிதாப் பச்சன், சல்மான் கான், ஷாருக்கான், அஜய் தேவ்கன், அக்‌ஷய் குமார் போன்ற முன்னணி நடிகர்களும் விளம்பரங்களில் நடிக்க ஆர்வம் காட்டி வருகின்றனர்.

34

அந்த வகையில், பிரபல தெலுங்கு நடிகர் அல்லு அர்ஜுன், சமீபத்தில் முன்னணி நிறுவனத்தின் விளம்பரத்தில் நடிக்க மறுப்பு தெரிவித்துள்ளாராம். அந்த நிறுவனம் 6 கோடி ரூபாய் சம்பளம் தருவதாக கூறியும் நடிக்க மறுத்து விட்டாராம் அல்லு அர்ஜுன். ஏனெனில் அது உடலுக்கு கேடு விளைவிக்கும் புகையிலை விளம்பரம் என்பதன் காரணமாக அதில் நடிக்க மாட்டேன் என சொல்லிவிட்டாராம் அல்லு அர்ஜுன்.

44

அந்த விளம்பரத்தில் நடித்தால், நானே எனது ரசிகர்களை தவறான பாதைக்கு அழைத்துச் செல்வதுபோல் ஆகிவிடும். ஆதலால் அதில் நடிக்க மறுத்துவிட்டதாக அவர் கூறியுள்ளார். ரசிகர்களின் நலன் கருதி நடிகர் அல்லு அர்ஜுன் செய்த இந்த செயலுக்கு சமூக வலைதளங்களில் பாராட்டுக்கள் குவிந்த வண்ணம் உள்ளன. ஆனால் பாலிவுட் நட்சத்திரங்களான சல்மான் கான், ஷாருக்கான், அக்‌ஷய் குமார், அஜய் தேவ்கன் ஆகியோர் இன்றளவும் புகையிலை விளம்பரத்தில் நடித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படியுங்கள்... yash : சூப்பர்ஸ்டார் ஆகனும்னு ஆசை... 300 ரூபாயுடன் வீட்டை விட்டு ஓடி வந்த யாஷ் - ராக்கிங் ஸ்டார் ஆனது எப்படி?

Read more Photos on
click me!

Recommended Stories