பிளாஸ்டிக் சர்ஜரி செய்துகொண்டாரா அல்லு அர்ஜுன்? காட்டுத்தீ போல் பரவும் தகவல்

Published : Dec 04, 2024, 08:06 AM IST

புஷ்பா படத்தின் மூலம் பான் இந்தியா ஹீரோவாக உருவெடுத்த நடிகர் அல்லு அர்ஜுன், அழகுக்காக பிளாஸ்டிக் சர்ஜரி செய்துகொண்டாரா என்பது பற்றி இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

PREV
16
பிளாஸ்டிக் சர்ஜரி செய்துகொண்டாரா அல்லு அர்ஜுன்? காட்டுத்தீ போல் பரவும் தகவல்
Allu Arjun

தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வருபவர் அல்லு அர்ஜுன். இயக்குனர் ராகவேந்திர ராவ் தான் அல்லு அர்ஜுனை சினிமாவில் ஹீரோவாக அறிமுகப்படுத்தினார். தெலுங்கில் அவர் முதன்முதலில் நடித்த படம் கங்கோத்ரி. இப்படம் சுமாரான வெற்றியைப் பெற்றது. அதன்பின் தன் விடாமுயற்சியால் விஸ்வரூப வெற்றி பெற்ற அல்லு அர்ஜுன் இன்று ஒரு படத்துக்கு 300 கோடி சம்பளம் வாங்கும் அளவுக்கு அசுர வளர்ச்சி கண்டுள்ளார். இந்தியாவில் அதிக சம்பளம் வாங்கும் ஹீரோவும் இவர் தான்.

26
Telugu Hero Allu Arjun

அல்லு அர்ஜுனுக்கு பெயரையும் புகழையும் தேடித் தந்த படம் ஆர்யா. புதுமையான காதல் கதையம்சம் கொண்ட படமாக இதை உருவாக்கி இருந்தார் இயக்குனர் சுகுமார். ஆர்யா படத்தின் மூலம் முதல் பிளாக்பஸ்டர் வெற்றியை ருசித்தார் அல்லு அர்ஜுன். தேவிஸ்ரீ பிரசாத் இசையில் இப்படத்தின் பாடல்களும் ஹிட் ஆக, அதற்கு அல்லு அர்ஜுன் நடனம் கூடுதல் பலம் சேர்த்தது. அல்லு அர்ஜுனை மக்கள் மத்தியில் பிரபலமாக்கிய விஷயங்களில் அவரது நடனமும் ஒன்று. டோலிவுட்டின் சிறந்த நடனக் கலைஞர்களில் ஒருவராக அல்லு அர்ஜுன் திகழ்கிறார்.

36
Allu Arjun Controversy

ஒவ்வொரு படத்திலும் தன்னை மேம்படுத்திக் கொண்டே செல்கிறார் அல்லு அர்ஜுன். கேரளாவில் ரசிகர்கள் கொண்ட ஒரே தெலுங்கு நடிகர் அல்லு அர்ஜுன் என்பது குறிப்பிடத்தக்கது. அல வைகுண்டபுரமுலோ படத்தின் மூலம் அல்லு அர்ஜுன் பிளாக்பஸ்டர் வெற்றியைப் பதிவு செய்ததோடு, பாகுபலி படத்தின் சில சாதனைகளையும் முறியடித்தார். புஷ்பா படம் அல்லு அர்ஜுனுக்கு பான் இந்தியா ஹீரோ அந்தஸ்தை கொடுத்தது.

இதையும் படியுங்கள்... புஷ்பா 2 ரிலீசுக்கு முன்பே கசிந்த ‘புஷ்பா 3’ பட டைட்டில்

46
Pushpa 2 Allu Arjun

தென்னிந்தியாவை விட புஷ்பா வட இந்தியாவில் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது. எந்த விளம்பரமும் இன்றி அங்கு வெளியான புஷ்பா இந்தி பதிப்பு, மெதுவாக வாய்வழி விளம்பரத்தின் மூலம் ரூ.100 கோடிக்கு மேல் வசூல் செய்தது. பிரபாஸுக்குப் பிறகு இந்தியில் மிகப்பெரிய வெற்றியைப் பதிவு செய்த நடிகர் அல்லு அர்ஜுன் என்பதில் சந்தேகமில்லை. புஷ்பாவில் நடித்ததற்காக அல்லு அர்ஜுன் சிறந்த நடிகருக்கான தேசிய விருதைப் பெற்றார். டிசம்பர் 5 ஆம் தேதி புஷ்பா 2 வெளியாக உள்ளது. இந்தப் படத்தின் மூலம் அல்லு அர்ஜுன் ஆயிரம் கோடி வசூல் கிளப்பில் இணைய வாய்ப்புள்ளது.

56
Allu Arjun Plastic Surgery Rumours

டோலிவுட் வரலாற்றில் சிறந்த நடிகருக்கான தேசிய விருதைப் பெற்ற ஒரே நடிகர் அல்லு அர்ஜுன் தான். இவ்வளவு பெரிய புகழைப் பெற்ற அல்லு அர்ஜுன் ஒரு விஷயத்தில் தொடர்ந்து கேலி செய்யப்படுகிறார். அது என்னவென்றால் அல்லு அர்ஜுன் அழகுக்காக அறுவை சிகிச்சை செய்து கொண்டதாக குற்றச்சாட்டு உள்ளது. இந்தக் கோணத்தில் அல்லு அர்ஜுனை மற்ற நடிகர்களின் ரசிகர்கள் கேலி செய்கிறார்கள்.

66
Actor Allu Arjun

அல்லு அர்ஜுன் உண்மையில் பிளாஸ்டிக் சர்ஜரி செய்தாரா இல்லையா என்பதை பிரபல அறுவை சிகிச்சை நிபுணர் டாக்டர் ராஜசேகர் ஏற்கனவே ஒரு பேட்டியில் தெரிவித்திருக்கிறார். அதில் அல்லு அர்ஜுனின் பழைய புகைப்படங்களை பார்த்த அவர், அல்லு அர்ஜுன் அறுவை சிகிச்சை செய்தது உண்மைதான் என கூறி இருக்கிறார். குறிப்பாக அவர் மூக்கு மற்றும் உதடுகளுக்கு அறுவை சிகிச்சை செய்து கொண்டதாகத் தெரிவதாக அவர் தெரிவித்துள்ளார். டாக்டர் ராஜசேகரின் கருத்துகளை நெட்டிசன்கள் வைரலாக்கினர். ஆனால் அல்லு அர்ஜுன் ரசிகர்கள் இதை திட்டவட்டமாக மறுத்து சமூக வலைதளங்களில் மல்லுக்கட்டி வருகின்றனர்.

இதையும் படியுங்கள்... கங்குவா பட மொத்த வசூல்; ரிலீசுக்கு முன்பே தட்டிதூக்க பார்க்கும் புஷ்பா 2?

Read more Photos on
click me!

Recommended Stories