படம் வெளியான முதல் நாளிலேயே பின்னணி இசையின் சத்தம் மிகவும் அதிகமாக இருப்பதாகவும். திரைக்கதையில் மிகப்பெரிய தொய்வு இருப்பதாகவும் ரசிகர்கள் தெரிவித்து வந்த நிலையில், கங்குவா திரைப்படத்தின் வசூல் முதல் நாளிலேயே அடி வாங்க தொடங்கியது. நடிகர் சூர்யாவின் நடிப்பை தவிர திரைப்படத்தில் வேறு எதுவுமே சிறப்பாக இல்லை என்றும் தொடர்ச்சியாக விமர்சனங்கள் எழுந்து வந்த நிலையில் கங்குவா திரைப்படம் மிகப்பெரிய சரிவை சந்தித்தது. உலக அளவில் சுமார் 2000 கோடி வரை வசூல் செய்யும் என்று எதிர்பார்க்கப்பட்ட திரைப்படம். வெளியாகி 18 நாட்கள் முடிந்த நிலையிலும் கூட இன்னும் முழுமையாக 250 கோடி ரூபாயை வசூல் செய்யவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.