தெலுங்கு திரையுலகில் முன்னணி தயாரிப்பாளராக இருந்து வருபவர் தில் ராஜு. இவர் அங்கு படங்களைத் தயாரிப்பது மட்டுமின்றி ரிலீஸ் உரிமைகளை கைப்பற்றி ரிலீஸும் செய்து வருகிறார். இவர் சொன்னால் கேட்கும் அளவுக்கு ஏராளமான திரையரங்க உரிமையாளர்களும் இவருக்கு பக்கபலமாக உள்ளன. அந்த அளவுக்கு தெலுங்கு திரையுலகில் ஆதிக்கம் செலுத்தி வருகிறார் தில்ராஜு. இவர் தமிழ் திரையுலகிலும் அண்மையில் எண்ட்ரி கொடுத்தார்.
அந்த வகையில் தமிழில் இவர் இயக்கிய முதல் திரைப்படம் வாரிசு. விஜய் நாயகனாக நடித்த இப்படம் கடந்த ஜனவரி மாதம் பொங்கல் பண்டிகைக்கு ரிலீசாகி பிளாக்பஸ்டர் ஹிட் ஆனதோடு வசூலிலும் ரூ.300 கோடிக்கு மேல் வசூலித்து மாஸ் காட்டியது. வாரிசு படத்தின் மூலம் தில் ராஜுவும் தமிழகத்தில் மிகவும் பேமஸ் ஆகிவிட்டார். அவர் ஆடியோ லாஞ்சில் பேசிய பேச்சு மீம் டெம்பிளேட்டாக மாறும் அளவுக்கு மாறியது. அதைவைத்து ஏராளமான மீம்ஸ்களும் போடப்பட்டு வருகின்றன.
ஆனால் தில் ராஜு போட்ட கணக்கு தப்புக் கணக்கு ஆகிப்போனது. சாகுந்தலம் படம் ரிலீசான முதல் நாளே அப்படத்தின் ரிசல்ட் தெரிந்துவிட்டது. இதனால் இப்படம் படு தோல்வியை சந்தித்தது. இப்படத்தால் தயாரிப்பாளர்களுக்கு ரூ.20 கோடி வரை நஷ்டம் ஏற்பட்டதாக கூறப்பட்டது. இந்நிலையில், சாகுந்தலம் படத்தின் தோல்வி குறித்து முதன்முறையாக மனம்திறந்து உள்ளார் தில்ராஜு. அதன்படி, சாகுந்தலம் திரைப்படம் தான் தனது 25 வருட கெரியரிலேயே மிகப்பெரிய அளவு நஷ்டத்தை ஏற்படுத்திய படம் என ஓப்பனாகவே சொல்லிவிட்டார்.
சுமார் 60 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட சாகுந்தலம் திரைப்படம் ரூ.10 கோடி கூட வசூலிக்கவில்லை. ரிலீசுக்கு முன்பே இப்படத்தின் ஓடிடி உரிமையை ரூ.35 கோடிக்கு விற்றுவிட்டராம் தில் ராஜு. அதுமட்டும் செய்யாமல் இருந்திருந்தால், இன்னும் நஷ்டம் பெரியளவில் இருந்திருக்கும் என கூறப்படுகிறது. தில் ராஜு இதற்கு முன் சமந்தாவை வைத்து தயாரித்த 96 படத்தின் ரீமேக்கான ஜானு படமும் படுதோல்வி அடைந்தது குறிப்பிடத்தக்கது.
இதையும் படியுங்கள்... ஆந்திர அரசியலில் புயலை கிளப்பிவிட்டு... சைலண்டாக வந்து தயாரிப்பாளர் சங்க தேர்தலில் வாக்களித்த ரஜினி