பைத்தியக்காரத்தனமான செயல்களை செய்கிறார்... அவ்வளவுதான் சமந்தாவின் கெரியர் முடிஞ்சது - பிரபல தயாரிப்பாளர் சாடல்

Published : Apr 19, 2023, 10:48 AM IST

நடிகை சமந்தா மலிவான மற்றும் பைத்தியக்காரத்தனமான செயல்களை செய்து வருவதாக பிரபல தெலுங்கு தயாரிப்பாளர் சிட்டி பாபு சாடி உள்ளார்.

PREV
15
பைத்தியக்காரத்தனமான செயல்களை செய்கிறார்... அவ்வளவுதான் சமந்தாவின் கெரியர் முடிஞ்சது - பிரபல தயாரிப்பாளர் சாடல்

சினிமா பின்னணி இல்லாமல் சொந்த உழைப்பில் வளர்ந்து முன்னணி நடிகை என்கிற அந்தஸ்தை பெற்றிருப்பவர் சமந்தா. தனது அற்புதமான நடிப்புத் திறமையால் புகழ் பெற்ற சமந்தா, தனது தனிப்பட்ட வாழ்க்கையில் பின்னடைவைச் சந்தித்தார். அதுமட்டுமின்றி, மயோசிடிஸ் நோய் பாதிப்பும் அவரின் கெரியரின் வளர்ச்சிக்கு பெரும் தடையாக இருந்தது. இருப்பினும் மனம் தளராத சமந்தா அவற்றையெல்லாம் வென்று தற்போது மீண்டும் சினிமாவில் பிஸியாகிவிட்டார். 

25

சமந்தா நடிப்பில் தற்போது சாகுந்தலம் என்கிற சரித்திர படம் ரிலீசாகி உள்ளது. இப்படம் ரிலீசாகி கலவையான விமர்சனங்களை பெற்றதோடு பாக்ஸ் ஆபிஸிலும் படுமோசமான வசூலை பெற்று வருவதால் படுதோல்வியை நோக்கி நகர்ந்து வருகிறது. இந்த நிலையில், நடிகை சமந்தா குறித்து தயாரிப்பாளர் சிட்டி பாபு பரபரப்பு கருத்தை தெரிவித்துள்ளார். இதுதான் தற்போது டோலிவுட்டில் பேசு பொருள் ஆகி உள்ளது.

35

சமந்தாவின் கேரியர் முடிந்துவிட்டது, அவர் ஒரு டிராமா குயின், அவரது ஸ்டார் ஹீரோயின் அந்தஸ்தை இழந்துவிட்டார் என சமந்தாவை சரமாரியாக சாடியுள்ளார் சிட்டி பாபு. மேலும் அவர் கூறியதாவது : “விவாகரத்துக்குப் பின், வாழ்வாதாரத்துக்காக தான் புஷ்பா படத்தில் சமந்தா ஐட்டம் டான்ஸ் ஆடினார். ஸ்டார் ஹீரோயின் என்ற பட்டத்தை இழந்த பிறகு தனக்கு வரும் வாய்ப்புகளை எல்லாம் சமந்தா செய்து வருகிறார். ஹீரோயினாக அவரது கேரியர் முடிந்துவிட்டதால் மீண்டும் நட்சத்திர அந்தஸ்துக்கு வர முடியாது. தனக்கு கிடைக்கும் வாய்ப்புகளை செய்துகொண்டு அவர் தன் பயணத்தைத் தொடர வேண்டும்.

இதையும் படியுங்கள்... யாத்திசை முதல் குலசாமி வரை... ஏப்ரல் 21-ந் தேதி தியேட்டரில் இத்தனை தமிழ் படங்கள் ரிலீசா? - முழு லிஸ்ட் இதோ

45

யசோதா படத்தின் புரமோஷனின் போது சமந்தா அழுது கண்ணீர் சிந்தினார், அதன்மூலம் வெற்றி பெற முயன்றார். இப்போது சகுந்தலம் படத்திற்கும் அதே யுக்தியை கையாண்டிருக்கிறார். இறப்பதற்கு முன் இப்படியொரு வேடத்தில் நடிக்கத் திட்டமிட்டிருந்ததாக கூறி அனுதாபத்தை அடைய முயற்சிக்கிறார். அதே சமயம், தொண்டை சரியாக இல்லாததால், குரல் போனதாக பொய் சொல்கிறார். ஒவ்வொரு முறையும் செண்டிமெண்ட் கைகொடுக்காது.

55

கதாபாத்திரமும் படமும் நன்றாக இருந்தால் மட்டுமே மக்கள் ரசிப்பார்கள். இத்தகைய மலிவான மற்றும் பைத்தியக்காரத்தனமான செயல்கள் வேலை செய்யாது. ஸ்டார் ஹீரோயின் என்கிற பட்டத்தை இழந்த சமந்தா எப்படி சகுந்தலா கதாபாத்திரத்திற்கு ஏற்றார் என்பது தான் எனக்குள்ள பெரிய கேள்வி. எனக்கு சகுந்தலம் படத்தில் ஆர்வம் இல்லை” எனறு தயாரிப்பாளர் சிட்டிபாபு கூறியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இதையும் படியுங்கள்... தாமதமாகும் ஏகே 62! இது சரிப்பட்டு வராதுன்னு திடீரென பைக்கில் உலகசுற்றுலாவை தொடங்கிய அஜித் - வைரலாகும் போட்டோஸ்

Read more Photos on
click me!

Recommended Stories