யாத்திசை
பாண்டியர்களின் வீர வரலாற்றை பேசும் படமாக உருவாகி உள்ளது யாத்திசை. இப்படத்தை தரணி ராஜேந்திரன் இயக்கி உள்ளார். புதுமுகங்கள் நடித்துள்ள இப்படத்தை ரூ.10 கோடி செலவில் பிரம்மாண்டமாக படமாக்கி உள்ளனர். இப்படமும் வருகிற ஏப்ரல் 21-ந் தேதி திரையரங்குகளில் ரிலீஸாக உள்ளது. இப்படத்தை சக்தி பிலிம் பேக்டரி நிறுவனம் தமிழ்நாட்டில் ரிலீஸ் செய்கிறது.
யானை முகத்தான்
யோகிபாபு முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ள யானை முகத்தான் திரைப்படமும் வருகிற ஏப்ரல் 21-ந் தேதி ரிலீஸ் ஆக உள்ளது. பேண்டஸி காமெடி திரைப்படமான இதை ரெஜிஷ் மிதிலா இயக்கி உள்ளார். இப்படத்தில் யோகிபாபு உடன் ஊர்வசி, ரமேஷ் திலக், கருணாகரன் என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளது.
தமிழரசன்
விஜய் ஆண்டனி நாயகனாக நடித்துள்ள தமிழரசன் என்கிற ஆக்ஷன் திரில்லர் திரைப்படமும் ஏப்ரல் 21-ந் தேதி திரை காண உள்ளது. ஜெயம் ரவி நடித்த தாஸ் படத்தை இயக்கிய பாபு யோகேஸ்வரன் தான் இப்படத்தையும் இயக்கி உள்ளார். இளையராஜா இப்படத்திற்கு இசையமைத்து உள்ளார். இப்படத்தில் விஜய் ஆண்டனிக்கு ஜோடியாக ரம்யா நம்பீசன் நடித்துள்ளார்.