ஒரே படம்... சம்பள விஷயத்தில் நயன், சமந்தா, ராஷ்மிகாவை பின்னால் தள்ளிய மிருணாள் தாகூர்! மிரட்டுறாங்களே..!

Published : Apr 19, 2023, 12:17 AM IST

'சீதா ராமம்' பட நடிகை மிருணாள் தாகூர் , அந்த ஒரே படத்தின் வெற்றிக்கு பின்னர்... தற்போது கமிட் ஆகியுள்ள புதிய படத்தில் 2 மடங்கு சம்பளத்தை ஏற்றி, முன்னணி நடிகைகளுக்கு ஷாக் கொடுத்துள்ளதாக கூறப்படுகிறது.  

PREV
17
ஒரே படம்... சம்பள விஷயத்தில் நயன், சமந்தா, ராஷ்மிகாவை பின்னால் தள்ளிய மிருணாள் தாகூர்! மிரட்டுறாங்களே..!

சீதா ராமம் படத்தின் மூலம் பிரபலமான மிருணாள் தாகூர், முதல் முதலில் மராத்தி திரைப்படத்தின் மூலம் தான் திரையுலகில் அறிமுகமானார். சில ஹிந்தி சீரியங்களிலும் நடித்துள்ளார். இவரின் திறமையான நடிப்பை பார்த்து வியர்ந்து, இவரை பாலிவுட் இயக்குனர் டப்ரீஸ் நூரானி என்பவர், தான் இயக்கிய லவ் சோனியா படத்தில் அறிமுகப்படுத்தினார்.

27

முதல் படத்திலேயே இவருடைய நடிப்புக்கு ரசிகர்கள் மத்தியில் பாராட்டுக்கள் கிடைத்ததால், அடுத்தடுத்து முன்னணி நடிகர்களின் படங்களில் நடிக்க வாய்ப்புகள் கிடைத்தது. 

'ருத்ரன்' பட வெற்றியை... முதியோர் இல்லத்தில் உதவி செய்து கொண்டாடிய இயக்குநர் ஃபைவ் ஸ்டார் கதிரேசன்!
 

37

இந்நிலையில் கடந்த ஆண்டு, மிருணாள் தாகூர்... நடிகர் துல்கர் சல்மானுக்கு ஜோடியாக 'சீதா ராமம்' படத்தில் நடித்தார். இந்த படத்தில் இவரின் நடிப்பு மிகப்பெரிய அளவில் பேசப்பட்டது. திரைப்பட விமர்சகர்கள் பலர், இந்த படத்தின் வெற்றிக்கு முக்கிய காரணம் மிருணாள் தாகூரின் நடிப்பு என புகழ்ந்து தள்ளினர். 
 

47

இந்த படத்தின் வெற்றிக்கு பிறகு, இவருக்கு பல இயக்குனர்கள், தயாரிப்பளர்கள், நடிகர், நடிகைகளே ரசிகர்களாக மாறிவிட்டதாக கூறினர். இந்த படத்தில் ராஷ்மிகா மந்தனா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தாலும், மிருணாள் தாகூர் தான் அனைவரின் கவனத்தையும் ஈர்த்த நடிகையாக இருந்தார்.
 

Shamlee: அஜித் மஞ்சினிக்கு உள்ள அபார திறமை.. சர்வதேச ஓவிய கண்காட்சியில் இடம்பெற்ற ஷாம்லியின் படைப்புகள்!

57

இந்நிலையில் இந்த ஒரு படத்தின் வெற்றியை தொடர்ந்து, தற்போது நானி 30 ஆவது படத்தில் ஹீரோயினாக நடிக்கஒப்பந்தமாகியுள்ளார். இப்படத்தில் நடிக்க,  சீதா ராமம் படத்திற்கு வாங்கிய சம்பளத்தை விட 2 மடங்கு அதிகமாக வாங்கியுள்ளாராம். இந்த தகவல் ஒட்டு மொத்த ரசிகர்களையும் உச்சகட்ட அதிர்ச்சியில் உறைய வைத்துள்ளது.
 

67

அதாவது... சீதா ராமம் படத்தில் நடிக்க, 2 கோடி ரூபாய் தான் மிருணாள் தாகூருக்கு சம்பளமாக வழங்கப்பட்டுள்ளது. இதே படத்தில் நடித்த ரஷ்மிகாவுக்கு 4 கோடி சம்பளம் வழங்க பட்டதாம். ஆனால் தற்போது அவரையே மிஞ்சும் விதத்தில் 6 கோடியாக தன்னுடைய சம்பளத்தை உயர்த்தியுள்ளார் மிருணாள் தாகூர் . 

மனைவியுடன் சபரிமலைக்கு சென்று ஐயப்பனை தரிசனம் செய்த நடிகர் ஜெயராம்! வைரலாகும் புகைப்படம்!
 

77

தென்னிந்திய திரையுலகில் அதிக சம்பளம் வாங்கும் நடிகைகள் லிஸ்டில் உள்ள நயன்தாரா, சமந்தா, மற்றும் ராஷ்மிகா ஆகியோர் அதிக பட்சமாக 5 கோடி மட்டுமே சம்பளமாக பெரும் நிலையில்... இவர்களையே மிருணாள் மிஞ்சி விட்டதாக கூறப்படுகிறது. கவர்ச்சிக்கும் அம்மணி தயங்காமல் கிரீன் சிக்னல் காட்டுவது தான் இவரின் அசுர வளர்ச்சிக்கு காரணம் என அரசல்... புரசலாக ஒரு தகவல் பரவி கொண்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

Read more Photos on
click me!

Recommended Stories