நடிகர் ரவி மோகனின் விவாகரத்து மற்றும் அவரின் புது காதல் பற்றிய பேச்சுகள் தான் தமிழ் சினிமா உலகில் தற்போது ஹாட் டாப்பிக் ஆக உள்ளது. ஆர்த்தியுடனான விவாகரத்தும், அதைத் தொடர்ந்து கெனிஷா உடனான ரவி மோகனின் உறவு பெரும் கவனத்தை ஈர்த்தன. இப்போது, அனைத்திற்கும் காரணம் ஆர்த்தியின் தாய் சுஜாதா விஜயகுமார் என்று தயாரிப்பாளர் பாலாஜி பிரபு கூறுகிறார். ரவி மருமகனாக இல்லாமல், பணம் காய்க்கும் மரமாகவே பார்க்கப்பட்டதாக பாலாஜி பிரபு கூறி இருக்கிறார்.
24
ரவி மோகனை கொடுமைப்படுத்திய மாமியார்
பாலாஜி பிரபு கூறியதாவது : ஆர்த்தியுடனான திருமணத்திற்குப் பிறகு, ரவியை அவர்களது கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்தனர். ரவி என்ன சாப்பிட வேண்டும், என்ன செய்ய வேண்டும், எப்போது தூங்க வேண்டும், எழுந்திருக்க வேண்டும் என்று கூட கட்டுப்படுத்தினார்கள் என்பதை அறிய முடிந்தது. எங்கு சென்றாலும், ஆர்த்தி, ரவியை கண்காணிக்க ஒருவரை வைத்திருப்பார். இதெல்லாம் நடந்த உண்மை. மாமியார் மருமகளுடன் சண்டையிடுவதை நாம் அனைவரும் கேள்விப்பட்டிருக்கிறோம். ஆனால் இங்கே ஒரு மருமகனை மாமியார் கொடுமைப்படுத்தினார்.
34
ரவி மோகனுக்கு சம்பளம் இல்லை
ரவிக்கு சொந்தமாக வங்கிக் கணக்கு கூட இல்லை. கூண்டில் அடைக்கப்பட்ட கிளியைப் போல இருந்தார் ரவி. ஒரு மனிதன் பொறுத்துப் பொறுத்து முன்னேறுவான். ஆனால் அவன் ஒரு முறை எழுந்து நின்றால் எல்லாம் முடிந்துவிடும். அதுதான் இங்கே நடந்தது. திரையுலகில் யாருடைய முகத்திலும் சுஜாதா விஜயகுமார் நேராகப் பார்ப்பதில்லை. எல்லோரும் தனக்குக் கீழே இருப்பது போன்ற பாவனை அவருக்கு. மருமகனை வைத்து பணம் சம்பாதிக்கப் பார்த்தார். அவர் தயாரித்த படத்திற்கு ரவிக்கு சம்பளம் இல்லை. செலவுக்குக் கூட பணம் கொடுக்க மாட்டார்.
சுருக்கமாகச் சொன்னால், பணம் காய்க்கும் மரமாகவே ரவி மோகனைப் பார்த்தார். மருமகனாக அவரைப் பார்க்கவே இல்லை. ஏடிஎம் இயந்திரமாகவே பார்த்தார். ஆர்த்தியைத் திருமணம் செய்ய வேண்டாம் என்று அவரது அப்பா, ரவியிடம் சொல்லியிருந்தார். ஆனால் காதல் காரணமாக, அவரைத் திருமணம் செய்து கொள்ள ரவி முடிவு செய்தார். அம்மாவின் பேச்சைக் கேட்டே ஆர்த்தி இதையெல்லாம் செய்தார் என பல பகீர் தகவல்களை பாலாஜி பிரபு வெளியிட்டு இருக்கிறார்.