Published : May 12, 2025, 11:15 AM ISTUpdated : May 12, 2025, 12:28 PM IST
விக்னேஷ் சிவன் இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன், கீர்த்தி ஷெட்டி நடிப்பில் உருவாகி இருக்கும் லவ் இன்சூரன்ஸ் கம்பெனி திரைப்படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டு உள்ளது.
Keerthi Shetty & Pradeep’s ‘LIK’ to Light Up Screens This September
விக்னேஷ் சிவன் இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன் நாயகனாக நடித்துள்ள திரைப்படம் லவ் இன்சூரன்ஸ் கம்பெனி. சீமான் முக்கிய வேடத்தில் நடிக்கும் இப்படத்தை நயன்தாராவின் ரவுடி பிக்சர்ஸ் மற்றும் லலித் குமாரின் செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ நிறுவனம் இணைந்து தயாரிக்கிறது. அனிருத் இசையமைக்கும் இப்படத்தில் கீர்த்தி ஷெட்டி நாயகியாக நடிக்கிறார். எஸ்.ஜே. சூர்யா, கெளரி கிஷான் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
24
சிவகார்த்திகேயனுக்கு பதில் பிரதீப் ரங்கநாதன்
முதலில் சிவகார்த்திகேயனை நாயகனாக வைத்து இப்படத்தை உருவாக்க திட்டமிட்டிருந்தார் விக்னேஷ் சிவன். லைகா நிறுவனம் தயாரிக்க இருந்தது. ஆனால் அப்படம் ஷூட்டிங் தொடங்கும் முன்னரே கைவிடப்பட்டது. இதையடுத்து சிவகார்த்திகேயனுக்கு பதிலாக பிரதீப் ரங்கநாதன் நாயகனாக தேர்வு செய்யப்பட்டார். லவ் இன்சூரன்ஸ் கம்பெனி திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிந்து பின்னணி பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இப்படத்திற்கு ரவி வர்மன் ஒளிப்பதிவு பணிகளை மேற்கொண்டுள்ளார்.
34
லவ் இன்சூரன்ஸ் கம்பெனி ரிலீஸ் தேதி
பிரதீப்பும் அவரது தந்தையாக நடிக்கும் சீமானும் ஒரே பெண்ணை காதலிப்பதுதான் இப்படத்தின் கதைச்சுருக்கம். டைம் டிராவல் கதையம்சம் கொண்ட இப்படம் எப்போது ரிலீஸ் ஆகும் என்பதை படக்குழுவே அதிகாரப்பூர்வமாக அறிவித்து உள்ளது. அதன்படி வருகிற செப்டம்பர் மாதம் 18ந் தேதி திரையரங்குகளில் ரிலீஸ் ஆகும் என அறிவிக்கப்பட்டு உள்ளது. டிராகன் படத்தின் பிளாக்பஸ்டர் வெற்றிக்கு பின்னர் பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் வெளியாக உள்ள படம் இது என்பதால் இதற்கு மிகப்பெரிய அளவில் எதிர்பார்ப்பு நிலவி வருகிறது.
பிரதீப் ரங்கநாதன் இதுவரை ஹீரோவாக நடித்த லவ் டுடே, டிராகன் ஆகிய இரண்டு படங்களும் பிரம்மாண்ட வெற்றியை ருசித்ததோடு, அப்படங்கள் பாக்ஸ் ஆபிஸிலும் ரூ.100 கோடிக்கு மேல் வசூலை வாரிக்குவித்தன. இதனால் லவ் இன்சூரன்ஸ் கம்பெனி திரைப்படம் மூலம் பிரதீப் ஹாட்ரிக் வெற்றியை ருசிப்பாரா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும். இப்படம் மூலம் இயக்குனர் விக்னேஷ் சிவன் கம்பேக் கொடுப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.