பிரியங்கா சோப்ரா முதல் அக்‌ஷய் குமார் வரையில் சொகுசு பங்களாவை விற்ற டாப் 4 பிரபலங்கள்!

Published : Apr 10, 2025, 12:54 AM IST

Top 4 Bollywood Celebrities Sold Their Luxury Houses in Mumbai : நடிகை பிரியங்கா சோப்ரா மும்பையில் உள்ள 4 ஆடம்பர அடுக்குமாடி குடியிருப்புகளை விற்றுள்ளார். ஒபராய் ஸ்கை கார்டன்ஸில் உள்ள வீடுகளை விற்றுள்ளார். இதற்கு காரணம் அவர் முழுமையாக வெளிநாட்டில் செட்டிலானது தானாம்.

PREV
18
பிரியங்கா சோப்ரா முதல் அக்‌ஷய் குமார் வரையில் சொகுசு பங்களாவை விற்ற டாப் 4 பிரபலங்கள்!
Top 4 Bollywood Celebrities Sold Their Luxury Houses in Mumbai

பாலிவுட் நடிகை பிரியங்கா சோப்ரா ஜோனாஸ் மும்பையின் அந்தேரி மேற்கு பகுதியில் உள்ள தனது 4 ஆடம்பர அடுக்குமாடி குடியிருப்புகளை ரூ.16.17 கோடிக்கு விற்றுள்ளார். இந்த 4 அடுக்குமாடி குடியிருப்புகளும் ஓபராய் ஸ்கை கார்டன்ஸ் திட்டத்தில் அமைந்துள்ளன.

28
Priyanka Chopra to Akshay Kumar

மும்பையின் அந்தேரி மேற்கில் உள்ள லோகண்ட்வாலாவில் உள்ள ஓபராய் ஸ்கை கார்டன்ஸ் என்ற திட்டத்தில் 18 மற்றும் 19வது மாடியில் அமைந்துள்ள அடுக்குமாடி குடியிருப்புகளை பிரியங்கா விற்றுள்ளார் என்று தகவல் வெளியாகியுள்ளது. 1075 சதுர அடி பரப்பளவில் அமைந்துள்ள 18வது மாடியில் உள்ள முதல் அடுக்குமாடி குடியிருப்பின் ஒப்பந்த மதிப்பு 3.45 கோடி. வாங்குபவர் 17.26 லட்சம் முத்திரை வரி செலுத்தியுள்ளார்.

38
Priyanka Chopra to Akshay Kumar Top 4 Bollywood Celebrities Sold Their Luxury Houses in Mumbai

மும்பையின் அந்தேரி மேற்கில் உள்ள லோகண்ட்வாலாவில் உள்ள ஓபராய் ஸ்கை கார்டன்ஸ் என்ற திட்டத்தில் 18 மற்றும் 19வது மாடியில் அமைந்துள்ள அடுக்குமாடி குடியிருப்புகளை பிரியங்கா விற்றுள்ளார் என்று தகவல் வெளியாகியுள்ளது. 1075 சதுர அடி பரப்பளவில் அமைந்துள்ள 18வது மாடியில் உள்ள முதல் அடுக்குமாடி குடியிருப்பின் ஒப்பந்த மதிப்பு 3.45 கோடி. வாங்குபவர் 17.26 லட்சம் முத்திரை வரி செலுத்தியுள்ளார்.

48
Priyanka Chopra to Akshay Kumar Top 4 Bollywood Celebrities Sold Their Luxury Houses in Mumbai

இந்த பிளாட்கள் மார்ச் 3ம் தேதி கைமாறப்பட்டதாக கூறப்படுகிறது. 2024 ஆம் ஆண்டில், பிரியங்கா சோப்ராவின் குடும்பம் புனேவில் உள்ள கோரேகான் பூங்காவில் உள்ள ஒரு பங்களாவை மாத வாடகையாக 2 லட்சம் ரூபாய்க்கு குத்தகைக்கு விட்டது. நடிகையின் சகோதரர் சித்தார்த் சோப்ராவும், தாயார் மது சோப்ராவும் இந்த பங்களாவின் உரிமையாளர்கள். வாடகைக்கு எடுத்த நிறுவனம் 6 லட்சம் ரூபாய் பாதுகாப்பு வைப்புத் தொகையாக செலுத்தியுள்ளதாக கூறப்படுகிறது.

58
Priyanka Chopra Act in Rajamouli Movie

தற்போது ராஜமௌலியின் இயக்கத்தில் நடித்து வரும் பிரியங்கா, அமெரிக்க பாடகர் நிக் ஜோனாஸை 2018ஆம் ஆண்டு திருமணம் செய்த பிறகு லாஸ் ஏஞ்சல்ஸில் குடியேறினார். அவர் முழுமையாக வெளிநாட்டில் குடியேறுவதன் ஒரு பகுதியாகவே இந்த பிளாட்டுகளை விற்றுள்ளார் என்று கூறப்படுகிறது.

68
Amitabh Bachchan Sold His Oshiwara duplex House

அமிதாப் பச்சன் ஓஷிவாரா குடியிருப்பு

இதே போன்று தான் பாலிவுட் சூப்பர்ஸ்டார் அமிதாப் பச்சனும் தனது வீடுகளை விற்றுள்ளார். மும்பையின் ஓஷிவாராவில் உள்ள தனது 1.55 ஏக்கர் கொண்ட டூப்ளக்ஸ் அடுக்குமாடி குடியிருப்பை ரூ.83 கோடிக்கு விற்று அதன் மூலமாக 168 சதவீதம் லாபம் பார்த்துள்ளார். இதற்கு முன்னதாக அந்த அடுக்குமாடி குடியிருப்பை வெறும் ரூ.31 கோடிக்கு வாங்கியிருக்கிறார். மேலும் மாதத்திற்கு ரூ.10 லட்சத்திற்கு அந்த வீட்டை நடிகை க்ருதி சனனுக்கு வாடகைக்கு விட்டுள்ளார் என்பது குறிபிடத்தக்கது.

78
Ajay Devgn Leases Andheri Office

அஜய் தேவ்கன் அந்தேரி ஆபீஸ்

பால்வுட் நடிகர் அஜய் தேவ்கன் மும்பையின் அந்தேரியில் உள்ள தனது வணிக அலுவலகத்தை பாலிவுட் இயக்குநர் கபீர் கானுக்கு ரூ.7 லட்சத்திற்கு மாத வாடகைக்கு குத்தகைக்கு கொடுத்துள்ளார். இந்த குத்தகை ஒப்பந்தம் கடந்த ஆண்டு செப்டம்பரில் இறுதி செய்யப்பட்டது.

88
Akshay Kumar Sold His 2 Apartments

அக்‌ஷய் குமார்

அக்‌ஷய் குமார் மும்பையில் உள்ள தனது போரிவலி கிழக்கில் ஓபராய் ஸ்கை சிட்டியில் உள்ள 2 அடுக்குமாடி சொகுசு வீட்டை மொத்தமாக ரூ.6.60 கோடிக்கு விற்றுள்ளார். இதன் மூலமாக 89 சதவிகிதம் லாபம் பார்த்துள்ளார். இந்த வீட்டை 2017 இல் ரூ.3.49 கோடிக்கு வாங்கியிருக்கிறார். ஒரு வீட்டை ரூ.5.35 கோடிக்கும், மற்றொரு வீட்டை ரூ.1.25 கோடிக்கும் விற்றுள்ளார்.

RK
About the Author

Rsiva kumar

நான் சிவக்குமார். கம்ப்யூட்டர் அப்ளிகேஷன் பிரிவில் முதுகலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 7 ஆண்டுகளாக இணைய ஊடகத்துறையில் பணியாற்றி வருகிறேன். சினிமா, கிரிக்கெட், ஜோதிடம், ஆன்மீகம் தொடர்பான செய்திகள் எழுதி வருகிறேன். தற்போது ஏசியாநெட் நியூஸ் தமிழ் இணையதளத்தில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறேன்.சிவக்குமார் எம்பிஏ படித்து முடித்துள்ளார். இவருக்கு டிஜிட்டல் மீடியாவில் 8 வருட பணி அனுபவம் உள்ளது. இப்போது ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறார். சினிமா, விளையாட்டு, ஜோதிடம், ஆன்மிகம் ஆகியவற்றில் ஆர்வம் உள்ளவர். அதுதொடர்பான சிறப்பு செய்திகளை எழுதி வருகிறார்.Read More...
Read more Photos on
click me!

Recommended Stories