யுபி முதல்வர் யோகி ஆதித்யநாத்தை சந்தித்து வாழ்த்து பெற்ற கண்ணப்பா மூவி டீம்!

Kannappa Movie Team Meet UP CM Yogi Adityanath : சிவ பக்தரான கண்ணப்பரைப் பற்றிய ஆன்மீக கதையை கொண்ட கண்ணப்பா படத்தை விளம்பரப்படுத்தும் விதமாக படக்குழுவினர் உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத்தை சந்தித்து வாழ்த்து பெற்றனர்.

Kannappa Movie Team Meet UP CM Yogi Adityanath for Promote Movie in Tamil rsk
Prabhu Deva and Yogi Adityanath

இயக்குநர் முகேஷ் குமார் சிங் இயக்கத்தில் விஷ்ணு மஞ்சு, மோகன் பாபு, சரத்குமார், கருணாஸ், பிரம்மானந்தம், மோகன்லால் (சிறப்பு தோற்றம்), அக்‌ஷய் குமார் (சிறப்பு தோற்றம்), காஜல் அகர்வால் (சிறப்பு தோற்றம்), பிரபாஸ் (சிறப்பு தோற்றம்) ஆகியோர் பலர் நடிப்பில் உருவான படம் தான் கண்ணப்பா. நடிகர் மோகன் பாபுவின் மகன் விஷ்ணு மஞ்சுவின் கனவு படமாக உருவான கண்ணப்பா வரும் ஜூன் 27ஆம் தேதி வெளியாக இருக்கிறது.

Kannappa Prabhu Deva Vishnu Manchu Promote Film

ரூ.200 கோடி பட்ஜெட்டில் உருவாக்கப்பட்ட இந்தப் படத்தில் பார்வதியாக காஜல் அகர்வால், சிவனாக அக்‌ஷய் குமார், ருத்ராவாக பிரபாஸ், கிராதாவாக மோகன்லால் என்று பலரும் பலவிதமாக கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். ஏ வி ஏ என்டர்டைன்மெண்ட்ஸ் மற்றும் 24 பிரேம்ஸ் பேக்டரி நிறுவனம் இணைந்து தயாரித்துள்ள இந்த படத்தில் தென்னிந்திய திரை உலகை சேர்ந்த பல நடிகர், நடிகைகள் மற்றும் சில பாலிவுட் பிரபலங்களும், மிக முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.


நடன இயக்குனர்-நடிகர் பிரபு தேவா மற்றும் விஷ்ணு மஞ்சு ஆகியோர் உத்தரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத்தை இன்று ஏப்ரல் 9ஆம் தேதி புதன்கிழமை லக்னோவில் உள்ள அவரது அலுவலகத்தில் சந்தித்து, அவர்களின் வரவிருக்கும் திரைப்படமான கண்ணப்பாவை விளம்பரப்படுத்தினர்.

Kannappa Movie Team

மோகன் பாபு பல்கலைக்கழகத்தின் வேந்தர் மோகன் பாபு மற்றும் வினய் மகேஸ்வரி ஆகியோரும் திரைப்படக் கலைஞர்களுடன் சென்றிருந்தனர். இந்த விஜயத்தின்போது, முதல்வர் ஆதித்யநாத் கண்ணப்பா படத்தின் போஸ்டரில் கையெழுத்திட்டு, படக்குழுவினருக்கு படத்தின் வெற்றிக்கு வாழ்த்து தெரிவித்தார். கண்ணப்பா குழுவினர் முதல்வர் யோகி ஆதித்யநாத்துக்கு கண்ணாடி ஓவியம் மற்றும் பிற பரிசுகளை வழங்கினர், பின்னர் அவருடன் குழு புகைப்படம் எடுத்துக் கொண்டனர்.

Kannappa Movie

இந்த விஜயத்திற்காக, பிரபு தேவா இளஞ்சிவப்பு நிற சட்டையும், வெள்ளை நிற கால்சட்டையும் அணிந்திருந்தார். கண்ணப்பா படத்தின் முன்னணி நட்சத்திரமான விஷ்ணு மஞ்சு நீல நிற ஜீன்ஸ் மற்றும் சாம்பல் நிற சட்டை அணிந்திருந்தார். நடிகர் தனது ஆன்மீக பக்கத்தை வெளிப்படுத்தும் வகையில் மணிகள் கோர்த்த மாலையையும் அணிந்திருந்தார், இது கண்ணப்பா திரைப்படத்தின் இந்து மத கருப்பொருளுடன் ஒத்துப்போனது.

Prabhas, Kannappa movie

கண்ணப்பா என்பது சிவபெருமானின் புகழ்பெற்ற பக்தரின் கதையைச் சொல்லும் ஒரு புராண இதிகாசம். இது முதலில் ஏப்ரல் 25 அன்று வெளியிட திட்டமிடப்பட்டது, ஆனால் தயாரிப்பாளர்கள் சமீபத்தில் வெளியீட்டு தேதியை ஒத்திவைத்தனர். மேலும் ஜூன் 27ஆம் தேதி வெளியாக இருப்பதாகவும் கூறப்படுகிறது. இந்த படத்தில் பிரபு தேவா ஒரு பாடலுக்கு நடனம் அமைக்கவுள்ளதாக கூறப்படுகிறது.

Kannappa movie

இந்த ஆண்டின் தொடக்கத்தில், நடிகர் தனது மகன் ரிஷி ராகவேந்தர் தேவாவை ஒரு உற்சாகமான நடன வீடியோ மூலம் அறிமுகப்படுத்தினார். புகழ்பெற்ற நடனக் கலைஞர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தந்தை-மகன் இருவரும் இணைந்து நடனமாடும் வீடியோவைப் பகிர்ந்துள்ளார். அந்த வீடியோவில் பிரபு தேவாவும் அவரது மகனும் மேடையில் நடனமாடுவதைக் காட்டியது, ரசிகர்கள் அவர்களை உற்சாகப்படுத்தினர். 

Latest Videos

vuukle one pixel image
click me!