அல்லு அர்ஜூன், அட்லீ படத்திற்கு ரூ.800 கோடி பட்ஜெட்டா? சரி, சம்பளம் எவ்வளவு தெரியுமா?

Published : Apr 09, 2025, 08:25 PM IST

Allu Arjun and Atlee AA22 A6 Movie Budget : அல்லு அர்ஜூன் நடிக்கும் 22ஆவது படத்தின் பட்ஜெட் குறித்து முக்கியமான தகவல் வெளியாகியிருக்கிறது. அட்லீ இயக்கும் இந்தப் படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது.

PREV
17
அல்லு அர்ஜூன், அட்லீ படத்திற்கு ரூ.800 கோடி பட்ஜெட்டா? சரி, சம்பளம் எவ்வளவு தெரியுமா?
Allu Arjun and Atlee AA22 A6 Movie Budget

Allu Arjun and Atlee AA22 A6 Movie Budget : அட்லீ இயக்கத்தில் அல்லு அர்ஜூன் ஹீரோவாக நடிக்கும் புதிய படம் பிரம்மாண்ட பட்ஜெட் படமாக உருவாகிறது. இந்த படத்தை படக்குழுவினர் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர். சன் பிக்சர்ஸ் நிறுவனம் இந்த படத்திற்காக பிரம்மாண்ட பட்ஜெட்டை ஒதுக்கவுள்ளது. இந்தப் படத்திற்காக அட்லீக்கும் பெரிய தொகை சம்பளமாக கிடைக்கவுள்ளதாக தெரிகிறது.

27
Allu Arjun and Atlee AA22 A6 Movie Budget

ஜவான் படத்திற்கு ரூ.30 கோடி சம்பளம்

ஏற்கனவே ஜவான் படத்திற்கு ரூ.30 கோடி சம்பளம் பெற்ற அட்லீ இந்தப் படத்திற்கு ரூ.100 கோடி பேசப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியிருக்கிறது. கிராஃபிக்ஸ் பணிகளுக்கே சுமார் 250 கோடி ரூபாய் செலவு செய்யப்படவுள்ளதாம். படத்தின் மொத்த பட்ஜெட் எவ்வளவு? நட்சத்திரங்களின் சம்பளம் எவ்வளவு? என்பது குறித்து பார்க்கலாம்.

37
Allu Arjun and Atlee AA22 A6 Movie Budget

Allu Arjun and Atlee AA22 A6 Movie Budget : பாகுபலியால் தெலுங்கு சினிமா பான் இந்தியா அளவில் புகழ் பெற்றது. அதன் பிறகு வந்த ஆர்ஆர்ஆர், புஷ்பா படங்கள் அதை அடுத்த கட்டத்திற்கு கொண்டு சென்றன. இதனால், தெலுங்கில் வரவிருக்கும் பெரிய பட்ஜெட் படங்கள் அனைத்தும் பான் இந்தியா பார்வையாளர்களை மனதில் வைத்து எடுக்கப்படுகின்றன. ராஜமௌலி போன்ற இயக்குனர்கள் உலகளாவிய பார்வையாளர்களை மனதில் வைத்து திரைப்படங்களை எடுக்கத் தொடங்கியுள்ளனர். 

47
AA22 Movie and A6 Movie Budget

அட்லீ - அல்லு அர்ஜூன் AA22 A6 படத்தின் பட்ஜெட்:

தற்போது தென்னிந்தியாவிலிருந்து உலக கவனத்தை ஈர்க்கும் படங்கள் வெளிவருகின்றன. அப்படி ஒரு பிரம்மாண்டமான படத்தின் அறிவிப்பு சமீபத்தில் வந்தது. அட்லீ இயக்கத்தில் அல்லு அர்ஜூன் நடிக்கும் படத்தை படக்குழுவினர் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர்.

57
Allu Arjun and Atlee Salary

அல்லு அர்ஜூன் ரசிகர்கள் குஷியாகும் வகையில் பிரம்மாண்ட பட்ஜெட்டில், அற்புதமான கான்செப்ட்டுடன் இந்த படம் உருவாகவுள்ளது. இந்த படத்தின் பட்ஜெட், நட்சத்திரங்களின் சம்பளம் அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்துகிறது. ஜவான் உட்பட பெரிய ஹிட் படங்களை எடுத்த அட்லீ, புஷ்பா ஹீரோ இணைந்து நடிக்கும் இந்த படத்தின் பட்ஜெட் சுமார் 800 கோடி ரூபாய் என பிங்க்வில்லா செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

67
Allu Arjun Join with Atlee for AA22 Movie

அல்லு அர்ஜூன், அட்லீ சம்பளம் எவ்வளவு?

இதில் ஆச்சரியம் என்னவென்றால் இந்த படத்தின் விஷூவல் எஃபெக்ட்ஸ் (VFX)க்காக மட்டுமே 250 கோடி சன் பிக்சர்ஸ் செலவு செய்கிறது. மேலும் பான் இந்தியா ஹீரோ, ஐகான் ஸ்டார் அல்லு அர்ஜூனுக்கு இந்த படத்திற்காக சுமார் 200 கோடி ரூபாய் சம்பளம் கொடுக்கப்படுவதாக தெரிகிறது. இது தவிர படத்தின் லாபத்தில் இருந்து 15 சதவீதம் அல்லு அர்ஜூனுக்கு கிடைக்கும். இயக்குனர் அட்லீயின் கேரியரில் இது 6வது படம். இந்த படத்திற்காக அவருக்கு ரூ.100 கோடி கொடுக்கப்படுவதாக தகவல்.

77
AA22 - A6 Movie Budget

அல்லு அர்ஜூன், அட்லீ சம்பளம் எவ்வளவு?

இதில் ஆச்சரியம் என்னவென்றால் இந்த படத்தின் விஷூவல் எஃபெக்ட்ஸ் (VFX)க்காக மட்டுமே 250 கோடி சன் பிக்சர்ஸ் செலவு செய்கிறது. மேலும் பான் இந்தியா ஹீரோ, ஐகான் ஸ்டார் அல்லு அர்ஜூனுக்கு இந்த படத்திற்காக சுமார் 200 கோடி ரூபாய் சம்பளம் கொடுக்கப்படுவதாக தெரிகிறது. இது தவிர படத்தின் லாபத்தில் இருந்து 15 சதவீதம் அல்லு அர்ஜூனுக்கு கிடைக்கும். இயக்குனர் அட்லீயின் கேரியரில் இது 6வது படம். இந்த படத்திற்காக அவருக்கு ரூ.100 கோடி கொடுக்கப்படுவதாக தகவல்.

RK
About the Author

Rsiva kumar

நான் சிவக்குமார். கம்ப்யூட்டர் அப்ளிகேஷன் பிரிவில் முதுகலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 7 ஆண்டுகளாக இணைய ஊடகத்துறையில் பணியாற்றி வருகிறேன். சினிமா, கிரிக்கெட், ஜோதிடம், ஆன்மீகம் தொடர்பான செய்திகள் எழுதி வருகிறேன். தற்போது ஏசியாநெட் நியூஸ் தமிழ் இணையதளத்தில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறேன்.சிவக்குமார் எம்பிஏ படித்து முடித்துள்ளார். இவருக்கு டிஜிட்டல் மீடியாவில் 8 வருட பணி அனுபவம் உள்ளது. இப்போது ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறார். சினிமா, விளையாட்டு, ஜோதிடம், ஆன்மிகம் ஆகியவற்றில் ஆர்வம் உள்ளவர். அதுதொடர்பான சிறப்பு செய்திகளை எழுதி வருகிறார்.Read More...
Read more Photos on
click me!

Recommended Stories