ஒரே நாளில் பேமஸ் ஆவது என்பது அரிதான விஷயம். அந்த லக்கெல்லாம் சினிமாவில் ஒருசிலருக்கு மட்டுமே கிடைக்கும். அப்படிப்பட்ட ஒரு அதிர்ஷ்டசாலி நடிகை தான் பிரியா பிரகாஷ் வாரியர். இவர் கடந்த 2018-ம் ஆண்டு ரிலீஸ் ஆன ஒரு அடார் லவ் படம் மூலம் நடிகையாக அறிமுகமானார். அப்படம் பிளாப் ஆனாலும், அது ரிலீஸ் ஆகும் முன்னே, அப்படத்தில் இடம்பெற்ற காட்சி ஒன்று வெளியாகி வேறலெவலில் வரவேற்பை பெற்றது.