பிரதீப் ரங்கநாதன் இயக்கத்தில் வெளியான படம் லவ் டுடே. பிகில் படத்தை தயாரித்த ஏஜிஎஸ் நிறுவனம் தான் இப்படத்தையும் தயாரித்து இருந்தது. இப்படத்தின் மூலம் பிரதீப் ஹீரோவாக அறிமுகமாகி உள்ளார். அவருக்கு ஜோடியாக இவானா இப்படத்தில் நடித்துள்ளார். யுவன் சங்கர் ராஜா இப்படத்திற்கு இசையமைத்து உள்ளார்.
24
கடந்த வெள்ளிக்கிழமை திரையரங்குகளில் ரிலீசான இப்படத்திற்கு முதல் நாளில் இருந்தே அமோக வரவேற்பு கிடைத்து வருகிறது. இதனால் இப்படத்தின் வசூலும் நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் உள்ளது. முதல் நாளில் இப்படம் 2.5 கோடி வசூலித்திருந்த நிலையில், இரண்டாம் நாளில் 5 கோடிக்கு மேல் வசூலித்து உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதன் மூலம் இரண்டு நாட்களில் இப்படம் ரூ.7.5 கோடிக்கு மேல் வசூலித்து உள்ளது. அதுமட்டுமின்றி இப்படம் தற்போதே லாபத்தை ஈட்டத் தொடங்கி உள்ளதாக கூறப்படுகிறது. ஏனெனில் இப்படத்தின் மொத்த பட்ஜெட்டே 5 கோடி தானாம். அதனை இரண்டே நாளில் கடந்துவிட்ட இப்படம் தற்போது பிளாக்பஸ்டர் வசூல் சாதனையை நோக்கி நகர்ந்து வருகிறது.
44
லவ் டுடே படத்திற்கு கிடைத்து வரும் வரவேற்பு காரணமாக இப்படத்திற்கான காட்சிகளும் தொடர்ந்து அதிகரிக்கப்பட்டு வருகின்றன. குறிப்பாக சென்னையில் நள்ளிரவு சிறப்பு காட்சிகளெல்லாம் போடும் அளவுக்கு இப்படத்திற்கு செம்ம டிமாண்ட் ஏற்பட்டுள்ளது. இன்றும் விடுமுறை நாள் என்பதால் லவ் டுடே படத்தின் வசூல் மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.