childhood actress shruthi : குழந்தை நட்சத்திரம் ஸ்ருதி...இப்ப எப்படி இருக்காங்க தெரியுமா?

First Published Nov 6, 2022, 11:25 AM IST

ஸ்ருதி அந்த பேட்டியில் தான் ஜெர்மனியில் ஐடி கம்பெனியில் வேலை செய்கிறேன், எனக்கு நடனமும் பாட்டு பாடுவதும் பிடிக்கும் என கூறியுள்ளார்.

shruthi

குழந்தை நட்சத்திரமாக திரைத்துறைக்கு அறிமுகமான பலரும் தற்போது முன்னணி நாயகிகளாக இருந்து வருகின்றனர். அதில் குறிப்பிடத்தக்கவர் மீனா, சுருதிஹாசன், கீர்த்தி சுரேஷ் உள்ளிட்டோர் அவர்களின் வரிசையில் ஒருவராக திகழ்வார் என எதிர்பார்க்கப்பட்ட நடிகை தான்  ஸ்ருதியும்.

shruthi

பார்த்திபன் நடித்த ஹிட் படங்களில் குறிப்பிடத்தக்க அழகி. கடந்த 2002 ஆம் ஆண்டு திரைக்கு வந்த இந்த படத்தை தங்கர் பச்சான் இயக்கியிருந்தார். இதில் பார்த்திபன், நந்திதா தாஸ், தேவயானி, விவேக் உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்திருந்தனர். 

அந்த படத்தில் குழந்தை நட்சத்திரம் ஸ்ருதி நடித்திருந்தார். அதேபோல விஜயகாந்தின் ரமணா படத்தில் பரதநாட்டியம் ஆடும்சிறுமியாக இவர் நடித்திருப்பார். 2000களில் அதிக தமிழ் படங்களில் குழந்தை நட்சத்திரமாக தோன்றியிருந்தவர் தான்  ஸ்ருதி.

மேலும் செய்திகளுக்கு...ஆறுதல் கூற செல்வதற்கே இவ்ளோ அலப்பறையா.. காரின் மேலே அமர்ந்து சென்ற பவன் கல்யாண் - ட்ரோல் செய்யும் நெட்டிசன்கள்

shruthi

தொடர்ந்து கடந்த 2006 ஆம் ஆண்டு இயக்குனரும் நடிகருமான பாண்டியராஜனின் மகன் கதாநாயகனாக நடித்த கை வந்த கலை என்னும் படத்தில் அவருக்கு ஜோடியாக மீண்டும் திரும்பி இருந்தார்  ஸ்ருதி. 

ஆனால் அந்த படம் போதுமான வரவேற்புகளை பெறவில்லை. இதைத்தொடர்ந்து சின்னத்திரை பக்கம் ஒதுங்கி விட்டார்  ஸ்ருதி.  விஜய் டிவிகள் ஜோடி நம்பர் ஒன் நிகழ்ச்சிகள் பங்கேற்றார். இதன் பிறகு  ஸ்ருதியை எங்கும் காண இயலவில்லை. அவர் குறித்தால் எந்த தகவலும் வெளியாகவில்லை.

shruthi

இந்நிலையில் சமீபத்தில் பிரபல சேனல் ஒன்றுக்கு அவர் அளித்தப் பேட்டி தற்போது வைரல் ஆகி வருகிறது. உடல் எடை கூடி அடையாளமே தெரியாமல் மாறிப்போன  ஸ்ருதி. அந்த பேட்டியில் தான் ஜெர்மனியில் ஐடி கம்பெனியில் வேலை செய்கிறேன், எனக்கு நடனமும் பாட்டு பாடுவதும் பிடிக்கும் என கூறியுள்ளார்.

shruthi

மேலும் ஆரம்பத்தில் இருந்தே சினிமாவில் நடிக்கும் ஆசை கிடையாது. நான் இரண்டாம் வகுப்பு படிக்கையில் தான் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானேன். சிறு வயது என்பதால் வசனங்களை மனதில் வைத்துக் கொள்வது கஷ்டமாக இருந்தது. ஆனால் ஏதாவது ஒரு துறைகள் ஜெயித்தே ஆகவேண்டும் என்ற முடிவிற்கு வந்தேன். பின்னர் நடிப்பதை விட்டுவிட்டு படிக்க ஆரம்பித்து விட்டேன் என தெரிவித்துள்ளார்.

click me!