‘லால் சலாம்’ படத்துக்கு முன் இத்தனை படங்களில் கெஸ்ட் ரோலில் நடித்துள்ளாரா ரஜினிகாந்த்? - முழு லிஸ்ட் இதோ

Published : Nov 06, 2022, 08:42 AM IST

லால் சலாம் படத்தில் கெஸ்ட் ரோலில் நடிக்க உள்ள ரஜினி, இதற்கு முன் தமிழ், இந்தி, தெலுங்கு, பெங்காலி உள்ளிட்ட மொழிகளில் மொத்தமாக 22 படங்களில் கெஸ்ட் ரோலில் நடித்து இருக்கிறார்.

PREV
14
‘லால் சலாம்’ படத்துக்கு முன் இத்தனை படங்களில் கெஸ்ட் ரோலில் நடித்துள்ளாரா ரஜினிகாந்த்? - முழு லிஸ்ட் இதோ

தமிழ் திரையுலகின் சூப்பர்ஸ்டாரான நடிகர் ரஜினிகாந்த், தற்போது பீஸ்ட் பட இயக்குனர் நெல்சன் இயக்கும் ஜெயிலர் படத்தில் ஹீரோவாக நடித்து வருகிறார். இப்படத்தின் ஷூட்டிங் ஒருபக்கம் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், ,மறுபுறம் இவர் அடுத்ததாக நடிக்க உள்ள லால் சலாம் என்கிற படத்திற்கு நேற்று பூஜை போடப்பட்டது.

24

லைகா நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தை ரஜினிகாந்தின் மூத்த மகள் ஐஸ்வர்யா இயக்க உள்ளார். கிரிக்கெட்டை மையமாக வைத்து உருவாகும் இப்படத்தில் ரஜினி கெஸ்ட் ரோலில் தான் நடிக்க உள்ளார். இப்படத்தின் நாயகர்களாக விஷ்ணு விஷாலும், விக்ராந்தும் நடிக்க உள்ளனர். இப்படத்திற்கு இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்க உள்ளார்.

34

லால் சலாம் படத்தில் கெஸ்ட் ரோலில் நடிக்க உள்ள ரஜினி, இதற்கு முன் அவ்வாறு ஏகப்பட்ட படங்களில் நடித்துள்ளார். தமிழ் மட்டுமல்ல இந்தி, தெலுங்கு, பெங்காலி போன்ற பிற மொழி படங்களிலும் ரஜினி கெஸ்ட் ரோலில் நடித்திருக்கிறார். அது என்னென்ன படங்கள் என்பதை இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

இதையும் படியுங்கள்... ஆரம்பமே அமர்களம்... பிரம்மாண்டமாக நடந்த ‘லால் சலாம்’ படத்தின் பூஜை - வைரலாகும் போட்டோஸ் இதோ

44

ரஜினி கெஸ்ட் ரோலில் நடித்த தமிழ் படங்கள்

1. தாயில்லாமல் நானில்லை
2. பாவத்தின் சம்பளம்
3. நட்சத்திரம்
4. வள்ளி
5. அக்னி சாட்சி
6. நன்றி மீண்டும் வருக
7. யார்
8. உருவங்கள் மாறலாம்
9. கோடை மழை
10. மனதில் உறுதி வேண்டும்
11. பெரிய இடத்துப் பிள்ளை
12. குசேலன்

ரஜினி கெஸ்ட் ரோலில் நடித்த இந்தி படங்கள்

1. கெராஃப்தார் (Geraftaar)
2. டகு ஹசீனா (Daku Hasina)
3. கைர் கனூனி (Gair Kanooni)
4. பிராஸ்டசர் (Bhrashtachar)
5. புலாண்டி (Bulandi)
6. ரா ஒன் (Ra one)

ரஜினி கெஸ்ட் ரோலில் நடித்த தெலுங்கு படங்கள்

1. ஆமே கதா
2. நியாயம் மீரே செப்பாலி 
3. பெடராயுடு

இதுதவிர பாக்ய டெபாடா என்கிற பெங்காலி படத்திலும் கெஸ்ட் ரோலில் நடித்திருக்கிறார் ரஜினி.

இதையும் படியுங்கள்... கிரிக்கெட் கதைக்களம்... முதன்முறையாக மகள் ஐஸ்வர்யா இயக்கத்தில் ரஜினி நடிக்கும் படத்தின் மாஸான டைட்டில் இதோ

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

Read more Photos on
click me!

Recommended Stories