பிறந்தநாள் செலிப்ரேஷனுக்கு தயாரான உலக நாயகன்! பலூனை கண்டதும் குழந்தையாகவே மாறி விளையாடிய கமல் போட்டோஸ்!

Published : Nov 05, 2022, 11:11 PM IST

நடிகர் கமல்ஹாசன் நவம்பர் 7 ஆம் தேதி தன்னுடைய 68-ஆவது பிறந்தநாளை கொண்டாட உள்ள நிலையில், பிறந்தநாள் செலிப்ரேன் செட்டப்பில், கமல்ஹாசன் எடுத்து கொண்டுள்ள புகைப்படங்கள் வைரலாகி வருகிறது.  

PREV
15
பிறந்தநாள் செலிப்ரேஷனுக்கு தயாரான உலக நாயகன்! பலூனை கண்டதும் குழந்தையாகவே மாறி விளையாடிய கமல் போட்டோஸ்!

தமிழ் சினிமாவில் ஒப்பற்ற கலைஞன் என பெயர் எடுத்தவர் உலக நாயகன் கமல்ஹாசன். இந்த வயதிலும், இளைஞர்களுக்கு நிகராக தன்னுடைய ஒவ்வொரு படத்தையும் தேர்வு செய்து நடித்து, அனைவரையும் ஆச்சர்யப்படுத்தி வருகிறார். அந்த வகையில், இவர் நடிப்பில் ஜூலை மாதம் வெளியான... 'விக்ரம்' திரைப்படம், 400 கோடிக்கு மேல் வசூல் சாதனை செய்தது.

25

திரையுலகில் தன்னுடைய  முழு பங்களிப்பை அளித்து வருவது போல, கடந்த ஐந்து வருடங்களாக அரசியல் பணியிலும் தீவிரம் காட்டி வருகிறார். எனவே இவரது பிறந்தநாளை ஒரு பெருவிழாவாக கொண்டாட காத்திருக்கின்றனர் இவரின் தீவிர தொண்டர்கள்.


வெளியான சில மணிநேரத்தில் காப்பி சர்ச்சையில் சிக்கிய 'வாரிசு' படத்தின் ரஞ்சிதமே பாடல்! கலாய்க்கும் நெட்டிசன்கள்

35

நடிப்பு, அரசியல் என தன்னை எப்போதுமே படு பிசியாக வைத்திருக்கும் கமல்ஹாசன்... பிக்பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியையும் தொகுத்து வழங்கி வருகிறார். பிக்பாஸ் நிகழ்ச்சி ரசிகர்கள் வாரத்தில்  5 நாட்கள் நிகழ்ச்சியை மிஸ் செய்தாலும், கமல்ஹாசன் திரையில் தோன்றும் அந்த இரு நாட்களை மட்டும் மிஸ் செய்வது இல்லை. காரணம் அந்த அளவுக்கு நேர்த்தியாக இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருவது தான்.

45

அரசியலில் கவனம் செலுத்த துவங்கியதில் இருந்து, திரைப்படங்கள் நடிப்பதை குறைத்து கொண்ட கமல், 'விக்ரம்' படத்தின் வெற்றிக்கு பின்னர், மீண்டும் திரையுலகில் சுறுசுறுப்பாக இயங்க துவங்கியுள்ளார். அந்த வகையில் இவர் நடித்து, பாதியில் நிறுத்தப்பட்ட 'இந்தியன் 2' படம், விறுவிறுப்பாக தயாராகி வருகிறது. இந்த ஆண்டிலேயே இந்த படத்தின் படப்பிடிப்பை முடித்து, அடுத்த ஆண்டு இந்த படத்தை ரிலீஸ் செய்யும் திட்டத்தில் படக்குழுவினர் உள்ளனர்.

இந்த பணியவே சுபாஸ்கரன் உயர்வுக்கு காரணம்! கல்கியை வணங்கி விட்டு அவரது அறக்கட்டளைக்கு ரூ.1 கோடி நன்கொடை!

55

இந்நிலையில் நடிகர் கமல்ஹாசனின் 68 ஆவது பிறந்தநாள் நவம்பர் 7 ஆம் தேதி மிகவும் பிரமாண்டமாக கொண்டாடப்பட உள்ளது. இவரது பிறந்தநாளை கலர் ஃபுல்லாக செலிப்ரேட் செய்ய, ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ள நிலையில், பலூன்களால் போடப்பட்ட பர்த்டே செட்டப்பில் அமர்ந்து, சிறு குழந்தையாகவே மாறி கமல் பலூனை தூக்கி போட்டு விளையாடும் சில புகைப்படங்கள் வெளியாகி வைரலாகி வருகிறது.

Read more Photos on
click me!

Recommended Stories