இந்த பணிவே சுபாஸ்கரன் உயர்வுக்கு காரணம்! கல்கியை வணங்கி விட்டு அவரது அறக்கட்டளைக்கு ரூ.1 கோடி நன்கொடை!

First Published | Nov 5, 2022, 7:59 PM IST

அமரர் கல்கி கிருஷ்ணமூர்த்தியின் அறக்கட்டளைக்கு, 'பொன்னியின் செல்வன்' தயாரிப்பாளர் லைகா குழும தலைவர் சுபாஸ்கரன் மற்றும் மணிரத்தினம் இணைந்து ஒரு கோடி ரூபாய் நன்கொடை வழங்கி நெகிழ வைத்துள்ளார்.
 

அமரர் கல்கி எழுதிய 'பொன்னியின் செல்வன்' நாவலை, லைகா புரொடக்ஷன்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில், மணிரத்னம் இயக்கத்தில் 'பொன்னியின் செல்வன்' எனும் பெயரில் இரண்டு பாகங்களைக் கொண்ட திரைப்படமாக தயாரித்திருக்கிறது. இதன் முதல் பாகம் கடந்த செப்டம்பர் 30-ஆம் தேதியன்று உலகம் முழுவதும் வெளியாகி, வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் பெரும் சாதனையை படைத்தது வருகிறது.

இந்நிலையில் லைகா குழுமம் மற்றும் மெட்ராஸ் டாக்கீஸ் ஆகிய இரண்டு நிறுவனங்களும், அமரர் கல்கியின் புகழையும், அவரது சேவைகளையும், பாரம்பரியத்தையும் போற்றும் வகையில் இயங்கி வரும் அமரர் கல்கி கிருஷ்ணமூர்த்தி அறக்கட்டளையின் முயற்சிகளுக்கு ஆதரவளிக்க முன்வந்துள்ளனர். கல்கியின் அறக்கட்டளை சேவைகளை ஊக்குவிக்கும் வகையில் லைகா குழும தலைவர் சுபாஸ்கரன் மற்றும் மெட்ராஸ் டாக்கீஸ் நிறுவனத்தின் தயாரிப்பாளர் மற்றும் இயக்குநர் மணிரத்னம் ஆகிய இருவரும் இணைந்து அமரர் கல்கி கிருஷ்ணமூர்த்தி அறக்கட்டளைக்கு நேரில் சென்றனர்.

மரண மாஸ்... தளபதியின் பட்டையை கிளப்பும் டான்ஸ்! ராஷ்மிகாவின் கிளுகிப்பான கவர்ச்சியோடு வெளியான ரஞ்சிதமே பாடல்!

Tap to resize

அங்கு கல்கி கிருஷ்ணமூர்த்தியின் மகன் கல்கி ராஜேந்திரன் அவர்களின் முன்னிலையில், அறக்கட்டளையின் நிர்வாகத் தலைவர் திருமதி சீதா ரவியிடம் ஒரு கோடி ரூபாயை நன்கொடையாக வழங்கினர்.  இந்த நன்கொடை அறக்கட்டளையின் மூலதன நிதியாதாரமாக அளிக்கப்பட்டிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

'பொன்னியின் செல்வன்' நாவலை எழுதிய அமரர் கல்கிக்கு நன்றி செலுத்தும் வகையில், அவரது குடும்ப உறுப்பினர்களின் நிர்வாகத்தின் கீழ் இயங்கி வரும் அறக்கட்டளைக்கு 'பொன்னியின் செல்வன்' படக்குழுவினர் ஒரு கோடி ரூபாயை மூலதன நிதி உதவியாக வழங்கி இருப்பது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. லைகா குழும தலைவர் சுபாஸ்கரன் மற்றும் இயக்குநர் மணிரத்னத்தின் இந்த செயலுக்கு, திரை உலகினர் மட்டுமல்லாமல், அவரின் வாசகர்கள் அனைவரும் பாராட்டு தெரிவித்து வருகிறார்கள்.

கமலிடம் வசமாக சிக்கிய தனலட்சுமி..! நிக்க வைத்து வெளுத்து விட்ட செம்ம சம்பவம்.. வெளியான புரோமோ..!

மேலும், சுபாஸ்கரன் லைகா என்கிற மிகப்பெரிய நிறுவனத்தின் தலைவராக இருந்த போதிலும்... கல்கியின் அறக்கட்டளைக்கு நேரடியாக சென்று, அவரது திருவுருவ படத்திற்கு மரியாதை செலுத்திய பின்னரே... இந்த நன்கொடையை வழங்கியுள்ளார். இவரது இந்த பணிவே, இவரின் வளர்ச்சிக்கு முக்கிய காரணம் என்கிற பாராட்டுகளும் குவிந்து வருகிறது. மேலும் இது குறித்த புகைப்படங்களும் வைரலாகி வருவது குறிப்பிடத்தக்கது.

ஆயிஷா அவரை விட்டு பிரிந்ததே நல்லது தான்..! முன்னாள் கணவர் பேட்டிக்கு சீரியல் நடிகர் விஷ்ணு கொடுத்த பதிலடி..!

Latest Videos

click me!