தொடர்ந்து பாலிவுட், தமிழ் உள்ளிட்ட மொழிகளிலும் இவருக்கு வாய்ப்புகள் குவிந்தது. அதன்படி பாலிவுட்டில் குட் பாய், மிஷன் மஜ்னு உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். அதேபோல தமிழில் விஜய் நடித்துவரும் வாரிசு படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை தெலுங்கு இயக்குனர் வம்சி இயக்க தில் ராஜு தயாரிக்கிறார். படத்தின் முதல் சிம்பிள் ப்ரோமோ தற்போது வெளியாகி மாஸ் காட்டி வருகிறது.