விஜய்யை தொடர்ந்து அஜித் பட தயாரிப்பாளர் உடன் இணைந்த பிரதீப் ; PR04 பட பூஜை!

Pradeep Ranganathan PR04 Movie Pooja Ceremony in Tamil : டிராகன் படத்தின் பிரம்மாண்ட வெற்றிக்கு பிறகு பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் உருவாகும் PR04 படத்திற்கான பூஜை இன்று போடப்பட்டுள்ளது.

Pradeep Ranganathan and Mamitha Baiju Starring PR04 Movie Pooja Ceremony Held Today at Chennai in Tamil rsk
Pradeep Ranganathan, PR04 Movie

இயக்குநர் அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் வெளியான இந்தப் படத்தில் பிரதீப் உடன் இணைந்து கயாடு லோஹர், அனுபமா பரமேஸ்வரன் ஆகியோர் பலர் நடித்திருந்தனர். இருவருமே சினிமாவில் அடுத்த லெவலுக்கு சென்றுவிட்டனர். கயாடுவை ரசிகர்கள் கொண்டாட தொடங்கிவிட்டனர். கடந்த பிப்ரவரி 21 ஆம் தேதி வெளியான இந்தப் படம் ரூ.150 கோடி வரையில் வசூல் குவித்துள்ளது. அதுமட்டுமின்றி இந்த ஆண்டில் அதிக வசூல் குவித்த படங்களின் பட்டியலில் டிராகன் இடம் பெற்றுள்ளது.

PR04 Pooja Ceremony, Pradeep Ranganathan

இந்தப் படம் கொடுத்த வரவேற்புக்கு பிறகு படக்குழுவினரை நேரில் அழைத்து தளபதி விஜய் வாழ்த்து தெரிவித்துள்ளார். தற்போது இயக்குநர் விக்னேஷ் சிவன் இயகத்தில் நடிப்பில் உருவாகி வரும் லவ் இன்ஸூரஸ் கம்பெனி படத்தில் நடித்து வருகிறார். இந்த நிலையில் தான் பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் உருவாகும் PR04 படத்தின் பூஜை இன்று போடப்பட்டுள்ளது.


PR04 Movie with Mythri Movie Makers

இயக்குநர் கீர்த்தீஸ்வரன் இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன், மமீதா பைஜூ, சரத்குமார், ஹிருது ஹாரூன் ஆகியோ பலர் நடிக்கின்றனர். இது கீர்த்தீஸ்வரனின் முதல் படம் என்பது குறிப்பிடத்தக்கது. இந்தப் படத்தை அஜித்தின் குட் பேட் அக்லீ படத்தை தயாரித்த மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. நிகேத் பொம்மிரெட்டி இந்தப் படத்தை ஒளிப்பதிவு செய்யவே, சாய் அபாயங்கர் இந்தப் படத்திற்கு இசையமைக்கிறார்.

PR04 with Director Keerthiswaran

லவ் டுடே, டிராகன் மற்றும் லவ் இன்சூரன்ஸ் கம்பெனி படத்திற்கு பிறகு பிரதீப் ரங்கநாதன் தனது 4ஆவது படமான PR04 படத்தில் நடிக்கிறார். இந்தப் படத்தின் பூஜை இன்று சென்னையில் போடப்பட்டுள்ளது. இதில் படக்குழுவினர் பலரும் கலந்து கொண்டுள்ளனர். இந்தப் படம் மமீதா பைஜூவின் 4ஆவது படம் ஆகும். இதற்கு முன்னதாஜ ரெபல், இரண்டு வானம், ஜன நாயகன் ஆகிய படங்களில் நடித்துள்ளார்.

Pradeep Ranganathan 4th Movie

இது மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் 2ஆவது படம். இதற்கு முன்னதாக அஜித்தின் குட் பேட் அக்லீ படத்தை தயாரித்துள்ளது. இந்தப் படம் வரும் ஏப்ரல் 10ஆம் தேதி வெளியாகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Latest Videos

vuukle one pixel image
click me!