சூப்பர்ஸ்டாருக்கு போட்டியாக வரும் சுப்ரீம் ஸ்டார்... போர் தொழில் படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு

Published : Aug 01, 2023, 03:07 PM IST

சரத்குமார், அசோக் செல்வன் நடிப்பில் வெளியாகி பிளாக்பஸ்டர் ஹிட் ஆன போர் தொழில் திரைப்படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதியை படக்குழு அறிவித்துள்ளது.

PREV
14
சூப்பர்ஸ்டாருக்கு போட்டியாக வரும் சுப்ரீம் ஸ்டார்... போர் தொழில் படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு
por thozhil, jailer

தமிழ் சினிமாவில் இந்தாண்டு பல்வேறு புதுமுக இயக்குனரின் திரைப்படங்கள் அடுத்தடுத்து வெற்றிகண்டிருக்கின்றன. கணேஷ் பாபு இயக்கிய டாடா, மந்திரமூர்த்தியின் அயோத்தி, விநாயக் சந்திரசேகரின் குட் நைட், பிரேம் ஆனந்த் இயக்கிய டிடி ரிட்டர்ன்ஸ் என இந்த லிஸ்ட் நீண்டு கொண்டே செல்கிறது. இதில் இடம்பெற்றுள்ள மற்றொரு முக்கியமான திரைப்படம் தான் போர் தொழில். இப்படத்தையும் விக்னேஷ் ராஜா என்கிற புதுமுக இயக்குனர் தான் இயக்கி இருந்தார்.

24
por thozhil

சரத்குமார், சரத்பாபு, அசோக் செல்வன், நிகிலா விமல் என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்திருந்த இப்படம் கடந்த ஜூன் மாதம் 9-ந் தேதி திரைக்கு வந்தது. ராட்சசன் பட பாணியில் செம்ம திரில்லிங் ஆன திரைக்கதையுடன் உருவாக்கப்பட்டிருந்த இப்படம் மக்கள் மத்தியில் ஏகோபித்த வரவேற்பை பெற்று திரையரங்குகளில் சக்கைப் போடு போட்டது. கம்மி பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட இப்படம் பாக்ஸ் ஆபிஸில் ரூ.50 கோடிக்கு மேல் வசூலை வாரிக்குவித்தது.

இதையும் படியுங்கள்... ஃபாரின் சென்ற தளபதி.. விஜய் மக்கள் இயக்கத்தினருடன் புஸ்ஸி ஆனந்த நடத்தும் திடீர் மீட்டிங்! பரபரப்பாகும் பனையூர்

34
por thozhil

வழக்கமாக ஒரு படம் தியேட்டரில் ரிலீஸ் ஆன 28 நாட்களில் ஓடிடியில் வெளியிடப்படும். ஆனால் போர் தொழில் படம் ஒரு மாதத்திற்கு மேல் தியேட்டரில் மவுசு குறையாமல் ஓடி வந்ததால், இப்படத்தின் ஓடிடி வெளியீட்டை தள்ளிவைத்து இருந்தனர். தற்போது திரையரங்கில் இப்படம் 50 நாட்களைக் கடந்துள்ள நிலையில், ஓடிடி ரிலீஸ் தேதியை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர்.

44
por thozhil

அதன்படி போர்தொழில் திரைப்படம் வருகிற ஆகஸ்ட் 11-ந் தேதி சோனி லிவ் ஓடிடி தளத்தில் ரிலீசாகும் என அறிவிக்கப்பட்டு உள்ளது. இப்படம் ஓடிடியில் ரிலீஸ் ஆகும் ஒரு நாள் முன்னதாக ரஜினிகாந்தின் ஜெயிலர் திரைப்படம் திரையரங்குகளில் ரிலீஸ் ஆக உள்ளது. அதற்கு போட்டியாக போர் தொழில் படத்தை ஓடிடியில் ரிலீஸ் செய்ய உள்ளனர். தியேட்டரில் பல்வேறு சாதனைகளை படைத்த போர் தொழில், ஓடிடியில் என்னென்ன சாதனைகளை படைக்கப்போகிறது என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.

இதையும் படியுங்கள்... தனுஷுடன் இணையும் அனிகா சுரேந்திரன்..! அதுவும் இப்படி ஒரு கதாபாத்திரத்தில் நடிக்கிறாரா.. வெளியான தகவல்!

Read more Photos on
click me!

Recommended Stories