சின்னத்திரையில் தொகுப்பாளராக தன்னுடைய பயணத்தை துவங்கி, பின்னர் வெள்ளித்திரையில் குணச்சித்திர நடிகையாக சில படங்களில் நடித்து பிரபலமானவர் பூஜா ராமச்சந்திரன்.
விவாகரத்துக்கு பின்னர் மீண்டும் திரையுலகில் கவனம் செலுத்தி வந்த பூஜா, மலையாள நடிகரும்... ஏற்கனவே திருமணம் ஆகி விவாகரத்தான, ஜான் கொக்கேன் என்பவருடன் டேட்டிங் செய்து வந்தார்.
சமீபத்தில் தான் பூஜாவுக்கு மிகவும் பிரமாண்டமாக வளைகாப்பு நடத்தி அழகு பார்த்தார் ஜான் கோகென். இவர் ஆர்யா நடித்த சார்பட்டா, மற்றும் அஜித்தின் துணிவு ஆகிய படங்களில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.
இந்நிலையில் இவர்கள் இருவருக்கும் அழகிய ஆண் குழந்தை பிறந்த தகவலை தற்போது அறிவித்துள்ளனர். குழந்தைக்கு கியான் கொக்கேன் என வித்தியாசமாக பெயர் வைத்துள்ளதை அறிவித்து, குழந்தையின் கையை பிடித்தபடி இருக்கும் கியூட் புகைப்படம் ஒன்றை இவர்கள் வெளியிட ரசிகர்கள் தங்களின் வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.