வனிதா விஜயகுமாரின் மூன்றாவது கணவர் பீட்டர் பால் அதிர்ச்சி மரணம்..! என்ன ஆச்சு?

First Published | Apr 29, 2023, 11:12 AM IST

நடிகை வனிதா விஜயகுமாரின்  மூன்றாவது கணவர் பீட்டர் பால், உடலநல குறைவால் மரணமடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 

கடந்த 2020 ஆம் ஆண்டு, கொரோனா பற்றிய தகவல்கள் ஒரு பக்கம் தீயாக பரவி வந்த நிலையில், மற்றொரு புறம் சமூக வலைதளத்தையே ஸ்தம்பிக்க வைத்தது நடிகை வனிதா மற்றும் பீட்டர் பாலின் மூன்றாவது திருமண பஞ்சாயத்து. இவர்கள் இருவருடைய திருமணத்திற்கு... ஒரு தரப்பினர் ஆதரவு தெரிவித்து வந்த நிலையில், மற்றொரு தரப்பினர் கண்டமேனிக்கு வனிதா மற்றும் பீட்டர் பாலை வச்சு செய்தனர்.
 

இந்த பிரச்சனைக்கெல்லாம் முக்கிய காரணம் பீட்டர் பால் தன்னுடைய முதல் மனைவி எலிசபத்தை முறையாக விவாகரத்து செய்யாமல் வனிதாவை இரண்டாது திருமணம் செய்து கொண்டது தான். இது குறித்து எலிசபர் காவல் நிலையத்தில் புகார் கொடுக்க, இந்த சம்பவம் மிகப்பெரிய பிரச்சினையாக பேசப்பட்டது. அதேபோல் வனிதா எலிசபத் தன்னிடம் பணம் கேட்டு மிரட்டுவதாகவும் புகார் அளித்து பரபரப்பை கிளப்பினார்.

பொன்னியின் செல்வன் 2 முதல் நாள் வசூல் மட்டும் இத்தனை கோடியா.! அடேங்கப்பா.!!

Tap to resize

பீட்டர் பாலை திருமணம் செய்து கொள்ள பல்வேறு எதிர்ப்புகள் கிளப்பிய நிலையில், மிகவும் எளிமையான முறையில்... பீட்டர் பால் குடும்ப வழக்க படி, கிருஸ்தவ முறைப்படம், பைபிள்,வாசித்து  மோதிரம் மாற்றி திருமணம் செய்து கொண்டனர். பின்னர் யங் ஜோடிகளையே மிஞ்சும் வகையில் ஹனி மூன், அவுட்டிங் போன்ற புகைப்படங்களையும் வெளியிட்டு மஜா செய்தார் வனிதா விஜயகுமார். ஆனால் இந்த வாழ்க்கை ஒரு வருடம் கூட நிலைக்காதது துரதிஷ்டவசம் தான்.   திருமணமான ஒரு சில மாதங்களிலேயே, இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது, பிரிந்தனர்.
 

பீட்டர் பாலுடன் கோவாவுக்கு வனிதா மற்றும் அவருடைய மகள்கள் சென்ற நிலையில், பீட்டர் பால் அங்கு ஓவராக சரக்கு அடித்து விட்டு எந்நேரமும், குடி சிகரெட் என இருந்ததால் வெறுத்துப்போன வனிதா அவரை வீட்டை விரட்டியடித்ததாக கூறப்பட்டது. தன்னுடைய மூன்றாவது திருமணமும் தோல்வியில் முடிந்தது வனிதாவின் வாழ்க்கையில் மிகப்பெரிய பேரிடி என்றாலும் மிக விரைவாகவே, அதிலிருந்து வெளியே வந்து அடுத்தடுத்த படங்களில் நடிக்க துவங்கினார்.  மேலும் ரியாலிட்டி ஷோக்கள், சீரியல்கள், பிசினஸ் என மிகவும் பரபரப்பாக இயங்கிக் கொண்டிருந்தார் வனிதா.

நடிகர் சரத்பாபுக்கு செப்சிஸ் பாதிப்பு.. இந்த நோயின் அறிகுறிகள் என்னென்ன? செப்சிஸ் வந்தால் என்னாகும் தெரியுமா?
 

இந்நிலையில் பீட்டர் பால் கடந்த சில மாதங்களாகவே உடல் நலமின்றி இருந்ததாக கூறப்பட்ட நிலையில், திடீர் என அவர் உயிரிழந்துள்ளதாக வெளியாகியுள்ள தகவல் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதை அடுத்து பலரும் அவருக்கு தங்களுடைய இரங்கல்களை தெரிவித்து வருகின்றனர். பீட்டர் பால் ஒரு விஷுவல் எபெக்ட் இயக்குனர் என்பது குறிப்பிடத்தக்கது. வனிதா youtube சேனல் ஒன்று துவங்குவதற்கு பீட்டர் பாலின் உதவியை தேடி சென்ற போது தான் இருவருக்கும் இடையே காதல் மலர்ந்து, பின்னர் அது திருமணத்தில் முடிந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

பழம்பெரும் நடிகர், நடிகைகளான, விஜயகுமார் - மஞ்சுளா விஜயகுமார் தம்பதிகளின் மூத்த மகள் வனிதா.இவர் ஏற்கனவே கடந்த 20 ஆயிரம் ஆண்டு ஆகாஷ் என்பவரை காதலித்து  திருமணம் செய்து கொண்டு 2007 ஆம் ஆண்டு அவரிடம் இருந்து விவாகரத்து பெற்றார். அவரை தொடர்ந்து தொடர்ந்து ஆனந்த் ஜெயராஜன் என்பவரை 2007 ஆம் ஆண்டு திருமணம் செய்துகொண்டு 2012 ஆம் ஆண்டு அவரிடம் இருந்தும் விவாகரத்து பெற்றார்.பின்னர் சில காலம் பிக் பாஸ் பிரபலமான ராபர்ட் மாஸ்டருடன் காதல் கிசுகிசுவில் சிக்கிய வனிதா, அவரிடமிருந்து பிரேக் அப் ஆகி, தனியாக மகள்களுடன் வாழ்ந்து வந்த போது தான் பீட்டர் பாலை சந்தித்து மூன்றாவது திருமணத்தில் இணைந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

SS Chakravarthy Passes Away: அஜித் பட தயாரிப்பாளர் திடீர் மரணம்.. சோகத்தில் மூழ்கிய திரையுலகம்..!

பீட்டர் பாலை விட்டு வனிதா பிரிந்து விட்ட நிலையில்... முன்னாள் கணவர் என்பதால் அவருக்கு நேரில் சென்று அஞ்சலி செலுத்துவாரா? என்கிற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
 

Latest Videos

click me!