நேற்று நடைபெற்ற பொன்னியின் செல்வன் டீசர் வெளியீட்டு விழாவில், ஐஸ்வர்யா ராய் மற்றும் விக்ரம் கலந்து கொள்ளவில்லை. தற்போது டீசர் விழா குறித்தான புகைப்படங்கள் வைரலாகி வருகிறது.
பிரபல இயக்குனர் மணிரத்தினத்தின் கனவு படமான பொன்னியின் செல்வன் தடபுடலாக தயாராகி வருகிறது. பிரபல நட்சத்திரங்கள் குறித்த போஸ்டர்கள் அடுத்தடுத்து வெளியான நிலைகள் நேற்று இதன் டீசர் வெளியாகி வைரல் ஆகி வருகிறது.
26
ponniyin selvan teaser evend photos
இரண்டு பாகங்களாக உருவாகும் இதன் முதல் பாகம் வரும் செப்டம்பர் மாதம் வெளியாக உள்ளது. சோழ மன்னர்கள் குறித்து எழுதிய கல்கியின் நாவலை பின் தொடர்ந்து உருவாகிறது பொன்னியின் செல்வன். மெட்ராஸ் டாக்கீஸ் மற்றும் லைக்கா ப்ரொடக்ஷன் இணைந்து தயாரிக்கும் இந்த படம் குறித்த ரசிகர்களின் எதிர்பார்ப்பு டீசருக்கு பிறகு அதிகரித்துள்ளது என்றே கூறலாம்.
36
ponniyin selvan teaser evend photos
இதில் ஐஸ்வர்யாராய் பட்சம் ஜெயம் ரவி, கார்த்தி, திரிஷா, ஐஸ்வர்யா லட்சுமி, பிரபு, சரத்குமார் விக்ரம் பிரபு பிரகாஷ்ராஜ், ரகுமான் மற்றும் பார்த்திபன் என நட்சத்திரங்கள் புடை சூழ காணப்படுகின்றன. இந்த படத்திற்கு இசை புயல் ஏ ஆர் ரகுமான் இசையமைக்கிறார்.
இந்தியாவின் பல்வேறு பகுதிகள் மற்றும் சில காட்சிகள் தாய்லாந்தில் படமாக்கப்பட்டுள்ளது. இதற்கான பிரம்மாண்ட செட் அமைக்கப்பட்டு ஐதராபாத்தில் பெரும்பாலான படப்பிடிப்பு நடைபெற்றது. விக்ரம், கார்த்தி, திரிஷா, ஐஸ்வர்யா ராய் ஆகியோரின் ரோல்கள் குறித்த போஸ்டர் சமீபத்தில் வெளியாகின.
அதன்படி ஆதித்ய கரிகாலனாக விக்ரம், பழுவூர் ராணியாக ஐஸ்வர்யா ராய், வந்திய தேவனாக கார்த்தி, குந்தவையாக த்ரிஷா, பளுவேட்டையராக சரத்குமார், பல்லவர்களின் பரம்பரையைச் சேர்ந்த ஆதித்ய கரிகாலனின் நண்பனாக விக்ரம் பிரபு, இவ்வாறு சோழ வம்சத்தில் இடம்பெற்ற அரசர்கள், அரசர்களின் நண்பர்கள், வீரர்கள் என அனைவரின் காதாபாத்திரங்களையும் பிரபல நட்சத்திரங்களே ஏற்று நடித்துள்ளனர்.
இந்நிலையில்,நேற்று நடைபெற்ற பொன்னியின் செல்வன் டீசர் வெளியீட்டு விழாவில், ஐஸ்வர்யா ராய் மற்றும் விக்ரம் கலந்து கொள்ளவில்லை. விக்ரமுக்கு நேற்று திடீரென ஏற்பட்ட நெஞ்சு வலி காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். தற்போது டீசர் விழா குறித்தான புகைப்படங்கள் வைரலாகி வருகிறது.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.