இந்தியா முழுவதும் தற்போது ஹாட் டாப்பிக்காக உள்ள படம் என்றால் அது பொன்னியின் செல்வன் தான். குறிப்பாக இப்படத்திற்கு தமிழ்நாட்டில் மிகப்பெரிய அளவில் எதிர்பார்ப்பு உள்ளது. மணிரத்னம் இயக்கியுள்ள இப்படத்தை லைகா நிறுவனம் பிரம்மாண்ட பட்ஜெட்டில் தயாரித்துள்ளது. நாளை 5 மொழிகளில் பான் இந்தியா படமாக பொன்னியின் செல்வன் ரிலீசாக உள்ளது.
பெரும்பாலான இடங்களில் முதல் நாளிலேயே 90 சதவீதத்திற்கும் மேற்பட்ட டிக்கெட்டுக்கள் விற்பனையாகிவிட்டதாக கூறப்படுகிறது. இதுவரை இந்திய சினிமா வரலாற்றில் ரிலீசான முதல் நாளில் அதிக வசூல் ஈட்டிய படங்கள் லிஸ்ட்டில் தென்னிந்திய படங்கள் தான் வரிசைகட்டி நிற்கின்றன. அந்த வரிசையில் பொன்னியின் செல்வனும் இணைய வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.
அதன்படி பொன்னியின் செல்வன் திரைப்படம் முதல்நாளில் மட்டும் ரூ.50 கோடிக்கு மேல் வசூல் ஈட்ட வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. அதன்படி இந்தியாவில் மட்டும் இப்படம் முதல் நாளில் ரூ. 25 கோடி வசூலிக்கும் என்றும், உலகளவில் ரூ,20 கோடிக்கு மேல் கிடைக்க வாய்ப்புள்ளதாகவும் பாக்ஸ் ஆபிஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இப்படம் என்னென்ன வசூல் சாதனை செய்யப்போகிறது என்பது நாளை தான் அதிகாரப்பூர்வமாக தெரியவரும்.
இதையும் படியுங்கள்... இன்னும் டிக்கெட் கிடைக்கல... பொன்னியின் செல்வன் படத்தில் நடித்த பார்த்திபனுக்கே இப்படி ஒரு நிலைமையா!