சின்னத்திரை மூலம் ரசிகர்களுக்கு பிரபலமானவர் ராஜூ ஜெயமோகன். இவர் துணை முதல்வர், மனிதன் நட்புனா என்னன்னு தெரியுமா, முருங்கைக்காய் சிப்ஸ் உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார்.
26
Raju Jeyamohan
முன்னதாக 2012 ஆம் ஆண்டு விஜய் டிவியில் ஒளிபரப்பான கனா காணும் காலங்கள் கல்லூரி கதை சீசன் 2 வில் நடித்திருந்தார். இதை தொடர்ந்து சரவணன் மீனாட்சி சீசன் 2, ஆண்டாள் அழகர், நாம் இருவர் நமக்கு இருவர் சீசன் 2, பாரதி கண்ணம்மா சீரியல்களில் நடித்துள்ளார்.
அதோடு நகைச்சுவை ராஜா கலக்கல் ராணி, பிக்பாஸ் கொண்டாட்டம், பிபி ஜோடிகள் 2, உள்ளிட்ட ரியாலிட்டி ஷோக்களிலும் வந்துள்ளார். சின்னத்திரை சீரியல்களில் தோன்றி வந்தார் ராஜு ஜெயமோகன்.
46
Raju Jeyamohan
தொடர்ந்து இவருக்கு 2001 ஆம் ஆண்டு ஒளிபரப்பான பிக் பாஸ் 5 தமி ழில் பங்கேற்கும் வாய்ப்பு கிடைத்தது. இதுதான் இவருக்கு மிகப்பெரிய பிரபலத்தை கொடுத்தது என்று கூறலாம். இந்த ஷோவில் ராஜுவின் நிதானமும் நகைச்சுவை தன்மையும் ரசிகர்களை வெகுவாகவே கவர்ந்தது. இதனால் அந்த ஷோவில் இவர்தான் வெற்றியாளர் ஆனார். முதல் பரிசை தட்டி சென்றார் ராஜூஜெயமோகன்.
முன்னதாக இவர் பிபி ஜோடிகள் 2வில் நாகர்ஜுனா, ராஜமவுலி, ரன்பீர் கபூர் உள்ளிட்டோர் பங்கேற்றிருந்த போது அவர்களுக்கு தமிழ் கற்றுக் கொடுப்பதாக சென்னை ஸ்லாங்கை பற்றி பேசி வலைதளங்களில் மாட்டிக் கொண்டார் ராஜு. பல விமர்சனங்களுக்கு ஆளானவர் பின்னர் மன்னிப்பும் கேட்டுவிட்டார்.
66
Raju Jeyamohan
தற்போது தனது மனைவியுடன் வெளிநாடு சுற்றுப்பயணத்தை மேற்கொண்டுள்ளார் ராஜூ ஜெயமோகன். லண்டனில் இருக்கும் ஸ்காட்லாந்துக்கு இருவரும் சென்றுள்ளனர். அங்கு எடுத்துக் கொண்ட புகைப்படங்கள் தற்போது இன்ஸ்டாவில் வெளியாகி உள்ளது.