இயக்குனர் மணிரத்னம் இயக்கியுள்ள 'பொன்னியின் செல்வன் 2' திரைப்படம், ஏப்ரல் 28 ஆம் தேதி வெளியாக உள்ளது. எனவே படத்தின் புரோமோஷன் பணிகள் படு தீவிரமாக நடந்து வருகிறது.
இந்த புரோமோஷன் பணிகளில் 'பொன்னியின் செல்வன் 2' படத்தில் முக்கிய வேடத்தில் நடித்துள்ள ஆதித்த கரிகாலனான விக்ரம், குந்தவை த்ரிஷா, பூங்குழலி ஐஸ்வர்யா லட்சுமி, அருண் மொழி வர்மன் ஜெயம் ரவி, வந்திய தேவனான கார்த்தி, மற்றும் வானதி கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் சோபிதா துளி பாலா ஆகியோர் கலந்து கொண்டுள்ளனர்.
முதல் பாகத்திற்கு இருந்த எதிர்பார்ப்பை விட, இரண்டாம் பாகத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் சற்று அதிகரித்தே காணப்படுகிறது காரணம். முதல் பாகத்தில் ட்விஸ்டுடன் மணிரத்னம் இந்த படத்தை முடித்துள்ளார்.
குறிப்பாக குந்தவை கதாபாத்திரத்திற்கு த்ரிஷா அவ்வளவு அழகாக பொருந்தி நடித்திருந்தார். படத்தில் மட்டும் அல்ல பொன்னியின் செல்வன் 2 படத்தின் புரோமோஷன் பணியிலும் ரசிகர்கள் கண்கள் அவரை விட்டு அகல வில்லை என்று தான் கூற வேண்டும்.