திரையுலகில் நடிகர் - நடிகைகள் காதலித்து திருமணம் செய்து கொள்வது என்பது அந்த காலத்தில் இருந்து, இந்த காலம் வரை வழக்கமான ஒன்றாக இருந்தாலும் கூட... தங்களின் வாழ்நாள் முழுவதும் அதே காதலோடு இருக்கிறார்களா என்றால் அது சந்தேகமே. பலர் திருமணமான சில வருடங்களிலே தங்களின் திருமணம் வாழ்க்கைக்கு முற்றுப்புள்ளி வைத்துவிட்டு, விவாகரத்து கேட்டு நீதிமன்றங்களை அணுகுவதை பார்த்திருக்கிறோம்.
இந்த ஸ்பெஷல் ஜோடிகள் லிஸ்டில் உள்ள எஸ்ட்ராங் ஸ்பெஷல்... அமர்க்களமான ஜோடி என்றால் அது அஜித் - ஷாலினி தான். 'அமர்க்களம்' படத்தில் ஒன்றாக நடித்த போது , இருவருக்குள்ளும் ஏற்பட்ட காதல் பின் திருமணத்தில் முடிந்தது. அஜித் குடும்பத்தில் அவருடைய காதலுக்கு உடனே பச்சை கொடி காட்டிவிட்டாலும், ஷாலினி குடும்பத்தில் அவ்வளவு எளிதில் சம்மதிக்கவில்லையாம். பல பிரச்சனைகளுக்கு பின்பு தான் ஒருவழியாக திருமணத்திற்கு ஓகே சொல்லி இருக்கிறார்கள்.
திருமணம் ஆகி 23 வருடங்கள் ஆனாலும் அஜித் - ஷாலினிக்குள் காதல் என்பது... இன்னும் குறையாமல் அதிகரித்துக்கொண்டே தான் செல்கிறது. சமீபத்தில் ஷாலினி இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இணைந்த நிலையில் அவ்வப்போது சில அசத்தல் புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்து வருகிறார் என்பது அனைவரும் அறிந்ததே.