மாடல் அழகியாக தனது கெரியரை தொடங்கிய ஷோபிதா துலிபாலா, கடந்த 2016-ம் ஆண்டு பாலிவுட்டில் வெளியான ராமன் ராகவ் 2.0 என்கிற திரைப்படத்தின் மூலம் நடிகையாக காலடி எடுத்து வைத்தார். இப்படத்தை அனுராஜ் கஷ்யப் இயக்கி இருந்தார். இதையடுத்து தெலுங்கு மற்றும் மலையாள படங்களிலும் நடிக்கத் தொடங்கிய ஷோபிதா, கடந்தாண்டு தமிழ் திரையுலகிலும் எண்ட்ரி கொடுத்தார்.