பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் பிரபலமானவர் ஓவியா. இவர் தமிழில் களவானி உள்பட சில வெற்றிப்படங்களில் ஹீரோயினாக நடித்திருந்தாலும், இவரை மக்கள் மத்தியில் பேமஸ் ஆக்கியது பிக்பாஸ் நிகழ்ச்சி தான். கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய இந்நிகழ்ச்சியின் முதல் சீசனில் போட்டியாளராக கலந்துகொண்ட ஓவியாவிற்கு அந்நிகழ்ச்சியின் முடிவில் மிகப்பெரிய ரசிகர் பட்டாளமே உருவானது. இவருக்காக டுவிட்டரில் ஆர்மியெல்லாம் தொடங்கப்பட்டது.
அந்த அளவுக்கு பாப்புலராக இருந்த ஓவியா, அந்நிகழ்ச்சியின் மூலம் கிடைத்த புகழ் வெளிச்சத்தை சரிவர பயன்படுத்திக் கொள்ளாததால், தற்போது பட வாய்ப்புகள் இன்றி தவித்து வருகிறார். இருப்பினும் சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருக்கும் அவர் அவ்வப்போது அதில் புகைப்படங்களை பதிவிட்டு வருகிறார். அந்த வகையில் சமீபத்தில் தனது ஆண் நண்பருடன் நெருக்கமாக இருக்கும் புகைப்படங்களை வெளியிட்டிருந்தார்.
இதையும் படியுங்கள்... போலி தங்கத்தை அடகு வைத்து மோசடி... சின்னத்திரை நடிகை கைது - வசமாக சிக்க வைத்த வாட்ஸ் அப் குரூப்
இதைப்பார்த்து ஷாக் ஆன ரசிகர்கள் அவரிடம் அடிக்கடி கேட்கும் கேள்வி என்னவென்றால் உங்களுக்கு எப்போது கல்யாணம் என்பது தான். அவர் இந்த கேள்வியை தவிர்த்து வந்தாலும், ரசிகர்கள் விடாமல் அவரிடம் இந்த கேள்வியை கேட்டு வருகின்றனர். அந்த வகையில் சமீபத்தில் இன்ஸ்டாகிராமில் ரசிகர்களுடன் கலந்துரையாடியபோதும் ஓவியாவிடம் அவரது திருமணம் தொடர்பாக கேள்வி எழுப்பப்பட்டது.