தியேட்டரில் ரிலீசாகும் தமிழ் படங்கள்
தமிழ் சினிமாவை பொறுத்தவரை இந்த வாரம் பஹீரா, பல்லுபடாம பாத்துக்கோ, அரியவன், அயோத்தி, இன்கார் ஆகிய 5 திரைப்படங்கள் தியேட்டரில் ரிலீசாக உள்ளன.
பஹீரா திரைப்படத்தில் பிரபுதேவா நாயகனாக நடித்துள்ளார். இப்படத்தை ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கி இருக்கிறார். இப்படத்தில் அமைரா தஸ்தூர், சஞ்சிதா ஷெட்டி, ஜனனி, சாக்ஷி அகர்வால், காயத்ரி என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளது. இப்படம் மார்ச் 3-ந் தேதி ரிலீசாக உள்ளது.
மார்ச் 3-ந் தேதி ரிலீசாகும் மற்றுமொரு திரைப்படம் அரியவன். இப்படத்தை மித்ரன் ஆர் ஜவஹர் இயக்கி உள்ளார். புது முகங்கள் இஷான், பிரனாலி நடித்துள்ள இப்படத்திற்கு ஜேம்ஸ் வஸந்தன், வேத் ஷங்கர் மற்றும் கிரிநாத் ஆகியோர் இசையமைத்து உள்ளனர்.
சசிகுமார் நடித்துள்ள அயோத்தி திரைப்படமும் மார்ச் 3-ந் தேதி திரையரங்குகளில் ரிலீஸ் ஆக உள்ளது. குக் வித் கோமாளி புகழ் நகைச்சுவை கதாபாத்திரத்தில் நடித்துள்ள இப்படத்தை மந்திர மூர்த்தி இயக்கி உள்ளார். உண்மைசம்பவங்களை மையமாக வைத்து இப்படத்தை எடுத்துள்ளனர்.
யூடியூப் பிரபலம் விஜய் வரதராஜ் இயக்கத்தில் உருவாகி இருக்கும் அடல்ட் காமெடி திரைப்படம் தான் பல்லுபடாம பாத்துக்கோ. அட்டக்கத்தி தினேஷ் நாயகனாக நடித்துள்ள இப்படத்தில் அவருக்கு ஜோடியாக சஞ்சிதா ஷெட்டி நடித்துள்ளார். இப்படமும் வருகிற மார்ச் 3-ந் தேதி தான் ரிலீசாக உள்ளது.
ஓடிடியில் ரிலீசாகும் தமிழ் படங்கள்
ஓடிடி வெளியீட்டை பொறுத்தவரை இந்த வாரம் 2 தமிழ் படங்கள் ஓடிடியில் ரிலீஸ் ஆக உள்ளன. அதில் ஒன்று தி கிரேட் இண்டியன் கிச்சன். ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்துள்ள இப்படத்தை கண்ணன் இயக்கி உள்ளார். இது மலையாள படத்தின் ரீமேக் ஆகும். இப்படம் வருகிற மார்ச் 3-ந் தேதி ஜீ5 ஓடிடி தளத்தில் ரிலீசாக உள்ளது.
ஓடிடியில் ரிலீசாகும் மற்றொரு தமிழ் படம் தலைக்கூத்தல். சமுத்திரக்கனி, கதிர் ஆகியோர் நடிப்பில் ரிலீசாகி விமர்சன ரீதியாக மாபெரும் வரவேற்பை பெற்ற இப்படம் மார்ச் 3-ந் தேதி நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் ரிலீசாக உள்ளது.
ஓடிடியில் ரிலீசாகும் மற்ற மொழி படங்கள்
மலையாளத்தில் மோகன்லால் நடித்த அலோன் திரைப்படம் ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் ரிலீஸ் ஆக உள்ளது. அதேபோல் இரட்ட திரைப்படம் நெட்பிளிக்ஸிலும் அத்ரிஷ்யம் திரைப்படம் அமேசான் பிரைமிலும் ரிலீஸ் ஆக உள்ளன. தெலுங்கில் புட்ட பொம்மா என்கிற திரைப்படம் நெட்பிளிக்ஸில் ரிலீசாக உள்ளது. இந்தியில் குல்முகார் என்கிற திரைப்படம் ஹாட்ஸ்டாரில் வருகிற மார்ச் 3-ந் தேதி ரிலீசாக உள்ளது.
இதையும் படியுங்கள்... விஷாலின் மார்க் ஆண்டனி பட ஷூட்டிங்கில் மீண்டும் விபத்து... ஒருவர் காயம் - மருத்துவமனையில் அனுமதி