இதனிடையே நேற்று முன்தினம் நடிகை ஐஸ்வர்யா லட்சுமி, தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் மாஸ்டர், கைதி பட வில்லன் நடிகரான அர்ஜுன் தாஸ் உடன் நெருக்கமாக எடுத்த செல்பி புகைப்படத்தை பகிர்ந்து அந்த பதிவில் ஹார்டின் எமோஜியையும் பதிவிட்டு இருந்தார். இதைப்பார்த்த ரசிகர்கள் இருவரும் காதலிப்பதாக கருதி, அவர்களுக்கு வாழ்த்துக்களையும் தெரிவிக்க ஆரம்பித்தனர். இதனால் அந்த புகைப்படம் சமூக வலைதளங்களில் பேசு பொருள் ஆனது.