இப்படியொரு கனெக்‌ஷன் இருக்கா? உக்ரைன் அதிபர் வீட்டு முன்பு ஷூட் செய்யப்பட்ட நாட்டு நாட்டு பாடல்!

Published : Jan 12, 2023, 05:11 PM IST

ராம் சரண் மற்றும் ஜூனியர் என் டி ஆர் ஆகியோரது நடிப்பில் வந்த ஆர் ஆர் ஆர் படத்தில் உள்ள நாட்டு நாட்டு பாடலானது உக்ரைன் அதிபரான ஜெலன்ஸ்கியின் வீட்டு முன்பாம படமாக்கப்பட்டதாக இயக்குநர் ராஜமௌலி நினைவு கூர்ந்துள்ளார்.

PREV
15
இப்படியொரு கனெக்‌ஷன் இருக்கா? உக்ரைன் அதிபர் வீட்டு முன்பு ஷூட் செய்யப்பட்ட நாட்டு நாட்டு பாடல்!
ஆர் ஆர் ஆர்

இயக்குநர் எஸ் எஸ் ராஜமௌலி இயக்கத்தில் ஜூனியர் என் டி ஆர், ராம் சரண், அஜய் தேவ்கன், ஆலியா பட், ஷ்ரேயா சரண், சமுத்திரக்கனி ஆகியோர் உள்பட ஏராளமான பிரபலங்கள் நடிப்பில் கடந்த ஆண்டு மார்ச் 25 ஆம் தேதி வெளியான படம் ஆர் ஆர் ஆர். இந்தப் படம் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பு பெற்றது.
 

25
எம்.எம்.கீரவாணி

அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சலீஸ் நகரில் உள்ள பெவர்லி ஹில்ஸ் என்னும் பகுதியில் 80 ஆவது கோல்டன் குளோப் விருது விழா மிக பிரம்மாண்டமாக நடந்தது. இதில் சிறந்த ஒரிஜினல் பாடல் பிரிவில் இயக்குனர் எஸ்.எஸ்.ராஜமௌலியின் ஆர்ஆர்ஆர் படத்தில் இடம்பெற்ற நாட்டு கூத்து பாடல் கோல்டன் குளோப் விருதை வென்றது. இந்த விருதை பாடலின் இசை அமைப்பாளர் எம்.எம்.கீரவாணி பெற்றுக்கொண்டார்.
 

35
நாட்டுக் கூத்து

நாட்டுக் கூத்து பாடலை பிரபல தெலுங்கு பாடலாசிரியரும் பாடகருமான சந்திரபோஸ் எழுதியுள்ளார். இவரது முழுப்பெயர் கனுகுந்த்லா சுபாஷ் சந்திரபோஸ். சந்திரபோஸ் 1995 ஆம் ஆண்டு தாஜ்மஹால் திரைப்படத்தில் பாடலாசிரியராக அறிமுகமானார். 27 வருட கால வாழ்க்கையில், 850க்கும் அதிகமான படங்களில் சுமார் 3,600 பாடல்களை எழுதியுள்ளார். ஒரு பாடலாசிரியராக, சந்திரபோஸ் இரண்டு மாநில நந்தி விருதுகள், இரண்டு பிலிம்பேர் விருதுகள் மற்றும் இரண்டு சைமா (SIIMA) விருதுகளைப் பெற்றுள்ளார்.
 

45
ராகுல் சிப்லிகஞ்ச், கால் பைரவா

நாட்டுக் கூத்து பாடலை ராகுல் சிப்லிகஞ்ச் மற்றும் கால் பைரவா இணைந்து பாடியுள்ளனர். இந்தப் பாடலின் லிரிக் வீடியோ கடந்த 2021 ஆம் ஆண்டு நவ.10 ஆம் தேதி வெளியிடப்பட்டது. முழுமையான வீடியோ பாடல் 2022 ஆம் ஆண்டு ஏப்.11 ஆம் வெளியிடப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில், இந்தப் பாடலானது உக்ரைன் நாட்டில் வைத்து படமாக்கப்பட்டது. இது குறித்து இயக்குநர் எஸ் எஸ் ராஜமௌலி கூறியிருப்பதாவது:
 

55
நாட்டு நாட்டு பாடல் ஷூட்

இந்த நாட்டு நாட்டு பாடலானது உக்ரைன் நாட்டு அதிபர் ஜெலன்ஸ்கியின் வீட்டு முன்பு வைத்து படமாக்கப்பட்டுள்ளது என்று கோல்டன் குளோப் விருது வழங்கும் விழாவில் காணொலி மூலமாக உக்ரைன் நாட்டு அதிபர் தெரிவித்துள்ளார். உக்ரைன் போர் தொடங்கிய பின்பு தான் இந்தப் பாடலின் ஷூட்டிங் நடந்தது. ஆர் ஆர் ஆர் படக்குழுவினர் உக்ரைனுக்கு படப்பிடிப்பிற்கு செல்வது குறித்து டுவிட்டரில் புகைப்படத்தை பகிர்ந்திருந்தனர். அதன் பிறகு ஷூட்டிங் முடிந்து நாட்டிற்கு திரும்பிய பிறகு தான் உக்ரைன் போர் குறித்த தீவிரத்தை உணர்ந்து கொண்டோம் என்று இயக்குநர் நினைவு கூர்ந்தார்.

RK
About the Author

Rsiva kumar

நான் சிவக்குமார். கம்ப்யூட்டர் அப்ளிகேஷன் பிரிவில் முதுகலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 7 ஆண்டுகளாக இணைய ஊடகத்துறையில் பணியாற்றி வருகிறேன். சினிமா, கிரிக்கெட், ஜோதிடம், ஆன்மீகம் தொடர்பான செய்திகள் எழுதி வருகிறேன். தற்போது ஏசியாநெட் நியூஸ் தமிழ் இணையதளத்தில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறேன்.சிவக்குமார் எம்பிஏ படித்து முடித்துள்ளார். இவருக்கு டிஜிட்டல் மீடியாவில் 8 வருட பணி அனுபவம் உள்ளது. இப்போது ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறார். சினிமா, விளையாட்டு, ஜோதிடம், ஆன்மிகம் ஆகியவற்றில் ஆர்வம் உள்ளவர். அதுதொடர்பான சிறப்பு செய்திகளை எழுதி வருகிறார்.Read More...
click me!

Recommended Stories