இயக்குனர் எஸ்.ஏ.சந்திரசேகரின் மகனான விஜய், சினிமா மீது அதீத ஆர்வம் கொண்டிருந்தார். ஆரம்ப காலத்தில் தந்தையின் அரவணைப்பிலேயே சினிமாவில் பயணித்து வந்த விஜய்க்கு திருப்புமுனையாக அமைந்த படம் பூவே உனக்காக. இதையடுத்து குஷி, பிரண்ட்ஸ், யூத், காதலுக்கு மரியாதை என தொடர்ந்து காதல் நாயகனாக வலம் வந்த விஜய்யை ஆக்ஷன் ஹீரோவாக மாற்றிய படம் என்றால் அது திருமலை.
திருமலை படத்தின் வெற்றிக்கு பின்னர் கில்லி, போக்கிரி, திருப்பாச்சி, சிவகாசி என தொடர்ந்து பிளாக்பஸ்டர் ஹிட் படங்களை கொடுத்த விஜய்யை மாஸ் ஹீரோ அந்தஸ்துக்கு உயர்த்தியது துப்பாக்கி திரைப்படம், அதன்பின் இவர் நடித்த கத்தி, ஜில்லா, சர்கார், மெர்சல், தெறி, பிகில், மாஸ்டர், வாரிசு என தொடர்ந்து பாக்ஸ் ஆபிஸ் ஹிட் படங்களை கொடுத்து மக்கள் மனதில் தளபதியாக இடம்பிடித்து இருக்கிறார்.