கரூரை அடுத்த அரவக்குறிச்சியில் தான் இப்படி ஒரு சம்பவம் அரங்கேறி உள்ளது. அரவக்குறிச்சியில் ஒரே ஒரு திரையரங்கம் தான் உள்ளது. அங்கு அஜித்தின் துணிவு திரைப்படம் மட்டுமே திரையிடப்பட்டது. அப்படத்திற்கான அதிகாலை 1 மணி மற்றும் 4 மணிக் காட்சிகள் ஹவுஸ்புல் ஆக இருந்தபோதும், இதற்கு அடுத்ததாக திரையிடப்பட்ட 7 மணிக் காட்சிக்கு மொத்தம் 17 பேர் மட்டுமே டிக்கெட் வாங்கியுள்ளனர்.