கூடுதல் காட்சிக்கு அனுமதி அளித்த தமிழக அரசு... துணிவை தட்டிவிட்டு தாறுமாறாக அதிகரிக்கப்படும் வாரிசு பட ஷோக்கள்

First Published Jan 12, 2023, 1:47 PM IST

கூடுதல் காட்சிக்கு அரசு அனுமதி அளித்ததை அடுத்து பெரும்பாலான இடங்களில் அஜித்தின் துணிவு படத்தைவிட விஜய்யின் வாரிசு படத்துக்கு அதிகளவிலான காட்சிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

துணிவு - வாரிசு படம் ரிலீசாகி உள்ளதால் கடந்த இரு தினங்களாகவே தமிழ் சினிமா பரபரப்பாக இயங்கி வருகிறது. இருதரப்பு ரசிகர்களுக்கும் இடையே சண்டை ஏற்பட்டுவிடக் கூடாது என்பதை கருத்தில் கொண்டு தான் துணிவு படத்துக்கு 1 மணி காட்சியும், வாரிசு படத்துக்கு 4 மணி காட்சியும் ஒதுக்கீடு செய்யப்பட்டது. அப்படி இருந்தும் இருதரப்பு ரசிகர்களும் நேற்று சண்டையிட்டுக்கொண்டனர். பின்னர் போலீசார் தடியடி நடத்தி அவர்களை விரட்டி அடித்தனர்.

இது ஒரு புறம் இருக்க வாரிசு மற்றும் துணிவு படங்களின் சிறப்பு காட்சியை வருகிற 13 முதல் 16-ம் தேதி வரை திரையிடக்கூடாது என உத்தரவிட்டு தமிழக அரசு திடீரென அறிக்கை ஒன்றை கடந்த சில தினங்களுக்கு முன்னர் வெளியிட்டிருந்தது. இதனால் படத்தின் வசூலும் பாதிக்கப்படும் சூழல் உருவானது. இதையடுத்து கூடுதல் காட்சிக்கு அனுமதி கோரி விநியோகஸ்தர்கள் சார்பில் தமிழக அரசிடம் கோரிக்கை முன்வைக்கப்பட்டது.

இதையும் படியுங்கள்... தில்ராஜுவால் துணிவுக்கு காத்திருக்கும் மிகப்பெரிய ஆப்பு! அஜித் படத்தை அவர் தெலுங்கில் வெளியிட்டது இதற்கு தானா?

இதனை ஏற்று, 12, 13 மற்றும் 18 ஆகிய தேதிகளில் கூடுதல் காட்சிகளை திரையிட்டுக்கொள்ள அனுமதி வழங்கப்பட்டது. அதுமட்டுமின்றி முறையான கொரோனா தடுப்பு வழிமுறைகளை பின்பற்ற வேண்டும் என்றும் தியேட்டர்களுக்கு அறிவுறுத்தப்பட்டு இருந்தது. இதனால் இன்றும் நாளையும், துணிவு மற்றும் வாரிசு படங்களுக்கு கூடுதல் காட்சிகள் திரையிடப்பட உள்ளன.

கூடுதல் காட்சிக்கு அரசு அனுமதி அளித்ததை அடுத்து பெரும்பாலான இடங்களில் அஜித்தின் துணிவு படத்தைவிட விஜய்யின் வாரிசு படத்துக்கு அதிகளவிலான காட்சிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. வாரிசு படத்திற்கு பேமிலி ஆடியன்ஸ் ரெஸ்பான்ஸ் அதிகளவில் இருப்பதால், அப்படத்துக்கு காட்சிகள் அதிகரிக்கப்பட்டு உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதையும் படியுங்கள்... கேரளா தளபதியின் கோட்டை... மீண்டும் நிரூபித்த விஜய்! வலிமை லைஃப்டைம் கலெக்‌ஷனை முதல் நாளே அடிச்சுதூக்கிய வாரிசு

click me!