தமிழில் கார்த்திக் சுப்புராஜ் இயக்கிய காதலில் சொதப்புவது எப்படி படத்தின் மூலம் அறிமுகமானவர் ஐஸ்வர்யா மேனன். அப்படத்தில் அமலா பாலின் தோழியாக நடித்திருந்தார் ஐஸ்வர்யா. இதையடுத்து சுந்தர் சி இயக்கத்தில் வெளியான தீயா வேலை செய்யணும் குமாரு படத்திலும் சிறிய வேடத்தில் நடித்திருந்தார்.
இதையடுத்து கடந்த 2016-ம் ஆண்டு வெளியான வீரா திரைப்படம் மூலம் தமிழ் திரையுலகில் ஹீரோயினாக காலடி எடுத்து வைத்த இவர், அடுத்ததாக சி.எஸ்.அமுதன் இயக்கத்தில் வெளியான தமிழ் படம் 2 படத்தில் நடிகர் சிவாவுக்கு ஜோடியாக நடித்திருந்தார்.
நடிகை ஐஸ்வர்யாவை மக்கள் மத்தியில் பேமஸ் ஆக்கிய படம் என்றால் அது நான் சிரித்தால் படம் தான். சுந்தர் சி தயாரிப்பில் வெளியான இப்படத்தில் ஹிப் ஹாப் ஆதிக்கு ஜோடியாக நடித்திருந்தார் ஐஸ்வர்யா மேனன். இப்படத்தின் மூலம் அவருக்கு ஏராளமான ரசிகர்களும் கிடைத்தனர்.
இன்ஸ்டாகிராமில் கிட்டத்தட்ட 30 லட்சம் பாலோவர்களை வைத்திருக்கும் ஐஸ்வர்யா மேனன் அவர்களை கவரும் விதமாக அவ்வப்போது அதில் தனது போட்டோஷூட் புகைப்படங்களை பதிவிட்டு வருகிறார்.
அந்த வகையில் தற்போது பொங்கல் ஸ்பெஷலாக பட்டுச் சேலையில் செம்ம கிளாமராக போட்டோஷூட் ஒன்றை நடத்தி அதன் புகைப்படங்களையும் பதிவிட்டு இருக்கிறார்.