துணிவு vs வாரிசு... பொங்கல் ரேஸில் பாக்ஸ் ஆபிஸ் வின்னர் யார்? அதிக கலெக்‌ஷனை அள்ளியது விஜய்யா?.. அஜித்தா?

Published : Jan 12, 2023, 10:31 AM IST

பொங்கல் ரேஸில் விஜய்யின் வாரிசு திரைப்படமும், அஜித்தின் துணிவு திரைப்படமும் நேருக்கு நேர் மோதிக்கொண்ட நிலையில், அதில் அதிக வசூலை வாரிக்குவித்தது யார் என்பதை இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

PREV
15
துணிவு vs வாரிசு... பொங்கல் ரேஸில் பாக்ஸ் ஆபிஸ் வின்னர் யார்? அதிக கலெக்‌ஷனை அள்ளியது விஜய்யா?.. அஜித்தா?

விஜய் நடித்துள்ள வாரிசு திரைப்படமும், அஜித் நடித்துள்ள துணிவு திரைப்படமும் 9 ஆண்டுகளுக்கு பின் ஒன்றாக ரிலீஸ் ஆகி உள்ளன. இதில் இரண்டு படங்களுக்குமே பாசிடிவ் விமர்சனங்கள் கிடைத்து வருவதால், இருதரப்பு ரசிகர்களும் உற்சாகம் அடைந்துள்ளனர். வசூலிலும் இரண்டு படங்களுக்குமே கடும் போட்டு நிலவி வருகிறது. அதன்படி பொங்கல் ரேஸில் அதிக கலெக்‌ஷனை அள்ளியது யார் என்பதை பார்க்கலாம்.

25

அஜித், விஜய் படங்களுக்கு எப்போதுமே முதல் நாள் வசூல் என்பது மிகவும் முக்கியமானது. அந்த வகையில் வாரிசு திரைப்படம் முதல் நாளில் உலகளவில் ரூ.26.5 கோடி வசூலித்துள்ளது முதலிடம் பிடித்துள்ளது. இதற்கு போட்டியாக ரிலீஸ் ஆன அஜித்தின் துணிவு படம் உலகளவில் ரூ.26 கோடி வசூலித்து நூலிழையில் முதல் இடத்தை நழுவவிட்டுள்ளது.

35

சென்னையைப் பொறுத்தவரை துணிவு திரைப்படம் முதல் நாளில் ரூ.3.75 கோடியும், வாரிசு திரைப்படம் ரூ.3.95 கோடியும் வசூலித்து உள்ளது. ஆனால் தமிழ்நாட்டில் துணிவு படம் தான் அதிகளவு வசூல் ஈட்டி உள்ளது. அப்படம் முதல் நாளில் ரூ.19 கோடிக்கு மேல் வசூலைக் குவித்துள்ளது. ஆனால் வாரிசு படத்துக்கு தமிழ்நாட்டில் ரூ.17 கோடி மட்டுமே வசூலித்துள்ளது.

இதையும் படியுங்கள்... பாக்ஸ் ஆபிஸில் தட்டித்தூக்கினாரா அஜித்?... துணிவு படத்தின் முதல் நாள் வசூல் நிலவரம் இதோ

45

தமிழ்நாட்டில் துணிவு படத்தின் வசூல் அதிகரித்ததற்கு முக்கிய காரணம், இப்படத்தின் முதல் காட்சி அதிகாலை 1 மணிக்கு திரையிடப்பட்டது தான். ஆனால் வாரிசு படத்தின் முதல் காட்சி 4 மணிக்கு தான் திரையிடப்பட்டது. இதனால் வாரிசு படத்தை விட துணிவு படத்துக்கு ஒரு ஷோ அதிகமாக கிடைத்தது. இதன்காரணமாகவே துணிவு படம் தமிழ்நாட்டில் அதிக வசூல் ஈட்டி உள்ளதாக கூறப்படுகிறது.

55

இன்னொரு முக்கியமான விஷயம் என்னவென்றால், துணிவு திரைப்படம் தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா, ஆந்திரா என அனைத்து மாநிலங்களிலும் வெளியானது. ஆனால் வாரிசு படம் ஆந்திரா, தெலுங்கானா மாநிலங்களில் ரிலீஸ் ஆகவில்லை. அப்படத்தின் தெலுங்கு வெஷன் ஆன வாரசுடு திரைப்படம் வருகிற ஜனவரி 14-ந் தேதி தான் அங்கு ரிலீசாக உள்ளது. அப்படி இருந்தும் வாரிசு திரைப்படம் முதல் நாள் பாக்ஸ் ஆபிஸில் துணிவை விட அதிக கலெக்‌ஷனை அள்ளி உள்ளது திரையுலகினர் மத்தியில் ஆச்சர்யத்தை ஏற்படுத்தி உள்ளது.

இதையும் படியுங்கள்... வசூலை வாரிக்குவித்ததா வாரிசு? - விஜய் படத்தின் முதல் நாள் பாக்ஸ் ஆபிஸ் நிலவரம் இதோ

Read more Photos on
click me!

Recommended Stories