வசூலை வாரிக்குவித்ததா வாரிசு? - விஜய் படத்தின் முதல் நாள் பாக்ஸ் ஆபிஸ் நிலவரம் இதோ

First Published | Jan 12, 2023, 9:30 AM IST

வம்சி இயக்கத்தில் விஜய், ராஷ்மிகா, சரத்குமார், ஜெயசுதா, பிரபு, பிரகாஷ் ராஜ் நடிப்பில் வெளியாகி உள்ள வாரிசு படத்தின் முதல் நாள் பாக்ஸ் ஆபிஸ் நிலவரம் வெளியாகி உள்ளது.

விஜய் நடித்துள்ள வாரிசு திரைப்படம் நேற்று திரையரங்குகளில் ரிலீஸ் ஆனது. வம்சி இயக்கத்தில் வெளியான இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடித்திருந்தார். தெலுங்கு திரையுலகில் முன்னணி தயாரிப்பாளராக இருக்கும் தில் ராஜு தான் இப்படத்தை பிரம்மாண்ட பொருட்செலவில் தயாரிக்கப்பட்டு இருந்தது.

குடும்பங்கள் கொண்டாடும் வகையில் காமெடி, ஆக்‌ஷன், செண்டிமெண்ட் என அனைத்தும் கலந்த கமர்ஷியல் படமாக வெளியாகி இருந்த வாரிசு திரைப்படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பு கிடைத்தது. பெரும்பாலும் இப்படத்திற்கு பாசிடிவ் விமர்சனங்களே கிடைத்திருந்தன. இந்நிலையில், வாரிசு படத்தின் முதல் நாள் பாக்ஸ் ஆபிஸ் கலெக்‌ஷன் விவரம் வெளியாகி உள்ளது. 

இதையும் படியுங்கள்... திரையரங்குகளில் சிறப்பு காட்சிகளுக்கு அனுமதி இல்லை சொன்னீங்க.. அப்படியானால் எல்லாமே செட்டிங்கா முதல்வரே? மநீம

Tap to resize

அதன்படி இப்படம் முதல் நாளில் உலகளவில் ரூ.26.5 கோடி வசூலை வாரிக்குவித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதில் தமிழ்நாட்டில் மட்டும் ரூ.17 கோடி வசூலித்துள்ளதாக கூறப்படுகிறது. அண்டை மாநிலங்களான கர்நாடகாவில் வாரிசு திரைப்படம் முதல் நாளில் ரூ.5 கோடி வசூலித்து உள்ளது. அதேபோல் கேரளாவில் இப்படம் ரூ.3.5 கோடி கலெக்‌ஷனை வாரிக்குவித்து உள்ளது.

ஹவுஸ்புல் காட்சிகளைப் பொறுத்தவரை வாரிசு படத்துக்கு பாண்டிச்சேரியில் திரையிடப்பட்ட அனைத்து காட்சிகளும் ஹவுஸ்புல் ஆனதாக கூறப்படுகிறது. இதற்கு அடுத்தபடியாக சென்னையில் 98 சதவீதமும் இருந்துள்ளது. இன்று இப்படத்தின் வசூல் மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளது. ஏனெனில் முன்பதிவு மூலம் மட்டும் ரூ.7 கோடி வசூல் ஆகி உள்ளது குறிப்பிடத்தக்கது.

இதையும் படியுங்கள்... இதற்காக தான் இத்தனை நாள் காத்திருந்தேன்! விஜய் ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த லோகேஷ் கனகராஜ்!

Latest Videos

click me!