தெலுங்கு திரையுலகில் முன்னணி தயாரிப்பாளராக வலம் வருபவர் தில் ராஜு. இவர் தற்போது விஜய்யின் வாரிசு படம் மூலம் தமிழ் திரையுலகிலும் காலடி எடுத்து வைத்துள்ளார். தமிழில் பொங்கல் பண்டிகை கொண்டாடப்படுவதைப் போல் ஆந்திராவில் சங்கராந்தி கொண்டாடப்படுகிறது. இதனால் அங்கும் பெரிய நடிகர்களின் படங்கள் இந்த சமயத்தில் வெளியாவது வழக்கம்.
ஆனால் இதற்கு தெலுங்கு தயாரிப்பாளர் சங்கம் எதிர்ப்பு தெரிவித்ததால் கடைசி நேரத்தில் வாரசுடு படத்தின் ரிலீஸ் தேதியை ஜனவரி 14-ந் தேதிக்கு மாற்றினார் தில் ராஜு. ஆனால் அதற்கு பதிலாக அஜித்தின் நடித்துள்ள துணிவு படத்தின் தெலுங்கு வெர்ஷன் ஆன தெகிம்பு படத்தின் முக்கியமான சில ஏரியாக்களின் ரிலீஸ் உரிமையை வாங்கி வெளியிட்டுள்ளார் தில் ராஜு.
அவர் அஜித் படத்தை ரிலீஸ் செய்ததன் பின்னணியில் மிகப்பெரிய மாஸ்டர் பிளான் உள்ளதாக கூறப்படுகிறது. அஜித்தின் தெகிம்பு திரைப்படம் திட்டமிட்டபடியே ஜனவரி 11-ந் தேதி ரிலீசாகி விட்டது. அப்படத்தினை மூன்று நாட்கள் மட்டும் ஓட்டிவிட்டு, அதன்பின் அப்படத்தை தூக்கிவிட்டு அதற்காக ஒதுக்கிய தியேட்டர்களில் வாரசுடு படத்தினை வருகிற ஜனவரி 14-ந் தேதி முதல் திரையிட உள்ளாராம் தில் ராஜு.
ஆந்திராவில் உள்ள பெரும்பாலான தியேட்டர்கள் அவரது கட்டுப்பாட்டில் இயங்கி வருகின்றன. இதனால் ஜனவரி 14-ந் தேதிக்கு பின் தெகிம்பு படம் வாஷ் அவுட் ஆகிவிடக் கூட வாய்ப்பு உள்ளதாக டோலிவுட் வட்டாரத்தில் தகவல் பரவி வருகிறது.
இதையும் படியுங்கள்... பிரபல நடிகரை காதலிக்கும் நடிகை ஐஸ்வர்யா லட்சுமி? நெருக்கமாக புகைப்படத்தோடு வெளியிட்ட வைரல் பதிவு!