தமிழ் சினிமாவின் கனவு திரைப்படமாக இருந்தது பொன்னியின் செல்வன். அதனை நனவாக்கியது மணிரத்னம் தான். நீண்ட போராட்டத்துக்கு பின்னர் அப்படத்தை இரண்டு பாகங்களாக எடுத்து முடித்த மணிரத்னம், அதன் முதல் பாகத்தை கடந்தாண்டு ரிலீஸ் செய்து வெற்றி கண்டார். தற்போது பொன்னியின் செல்வன் 2-ம் பாகம் ரிலீசுக்கு தயாராகி வருகிறது. அப்படம் ஏப்ரல் 28-ந் தேதி ரிலீசாக உள்ளதால் அதற்கான புரமோஷன் பணிகள் படு ஜோராக நடைபெற்று வருகிறது.
பொன்னியின் செல்வன் படம் சோழர்களைப் பற்றிய கதை. அவர்களின் ஆட்சிக்காலத்தில் நடத்தவற்றை தான் அதில் எழுதியுள்ளார் கல்கி. சோழர்களின் சொர்க்க பூமியாக தஞ்சாவூர் பார்க்கப்படுகிறது. படமும் தஞ்சையை சுற்றி நடக்கும் கதை தான். அப்படி இருந்தும் பொன்னியின் செல்வன் படத்தின் புரமோஷனுக்காக படக்குழு தஞ்சாவூர் பக்கம் தலைகாட்டாமலே இருந்து வருகிறது. தஞ்சைக்கு உள்ள செண்டிமெண்ட் காரணமாக அவர்கள் அங்கு செல்லவில்லை என்றும் சர்ச்சை எழுந்தது.
இதையும் படியுங்கள்... ஜெயம் ரவி மனைவி பிறந்தநாள் பார்ட்டியில் கீர்த்தி சுரேஷ்..! வைரலாகும் பிறந்தநாள் கொண்டாட்ட புகைப்படங்கள்!
இதுகுறித்து நேற்று சென்னையில் நடைபெற்ற பிரஸ்மீட்டில் கேட்கப்பட்டது. இதற்கு நடிகர் கார்த்தி பதிலளித்தார். அவர் கூறியதாவது : “முதல் பாகத்தின் டீசர் லாஞ்சே அங்கு இருந்து தான் ஆரம்பிக்க வேண்டியது. அப்போ தான் கொரோனா மூன்றாவது அலை பரவ ஆரம்பித்துள்ளதாக கூறப்பட்டது. அதனால் கலெக்டர் ரிஸ்க் வேண்டாம்னு சொல்லி அனுமதி அளிக்கவில்லை. தஞ்சாவூர் கோவில் பக்கத்துல அந்த விழா நடைபெற இருந்தது.
அதற்கு அனுமதி கிடைக்காததால் பின்னர் சென்னையில் இருந்து ஆரம்பித்துவிடலாம் என முடிவெடுத்து அப்படியே போயிட்டோம். இந்தமுறை திரும்ப அதற்கான முயற்சியை எடுப்போம். எங்களுக்கு தஞ்சாவூர் போகனும்னு ஆசை இருக்கு. கண்டிப்பா போவோம்” என கூறினார். ஆனால் இந்த முறை பொன்னியின் செல்வன் 2 படக்குழு வெளியிட்ட புரமோஷன் டூர் பிளானில் தஞ்சாவூர் பெயர் இடம்பெறவில்லை. ஒரு வேளை படம் ரிலீசான பின்னர் அங்குள்ள தியேட்டருக்கு படக்குழு விசிட் அடிப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதையும் படியுங்கள்... ரஜினி, விஜய் படத்திற்கு மட்டும் தனி நீதியா? ‘இராமானுஜர்’ பட தயாரிப்பாளர் ஆவேசம்!