மணிரத்னம் இயக்கிய பொன்னியின் செல்வன் படத்தின் முதல் பாகம் கடந்தாண்டு ரிலீசாகி பிளாக்பஸ்டர் ஹிட் ஆனதோடு பாக்ஸ் ஆபிஸிலும் ரூ.500 கோடிக்கு மேல் வசூலித்து மாஸ் காட்டியது. முதல் பாகத்தின் பிரம்மாண்ட வெற்றியைத் தொடர்ந்து அப்படத்தின் இரண்டாம் பாகத்தை ரிலீஸ் செய்ய படக்குழு தயாராகிவிட்டது. அதன்படி பொன்னியின் செல்வன் 2 படத்தை நாளை உலகமெங்கும் ரிலீஸ் செய்ய உள்ளனர். இதனால் ரசிகர்கள் ஆவலோடு காத்திருக்கின்றனர்.
பொன்னியின் செல்வன் படத்தின் தமிழக வெளியீட்டு உரிமையை ரெட் ஜெயண்ட் நிறுவனம் கைப்பற்றி உள்ளது. அதேபோல் இப்படத்தை வெளிநாடுகளில் லைகா நிறுவனம் பிரம்மாண்டமாக ரிலீஸ் செய்கிறது. பொன்னியின் செல்வன் முதல் பாகத்திற்கு அதிகாலை 4 மணி காட்சியெல்லாம் திரையிடப்பட்டது. ஆனால் தற்போது தமிழகத்தில் சிறப்பு காட்சிகளுக்கு அரசு அனுமதி அளிக்காததால் பொன்னியின் செல்வன் 2-ம் பாகத்தின் முதல் காட்சி காலை 9 மணிக்கு தான் திரையிடப்பட உள்ளது.
இதையும் படியுங்கள்... என்னமா ஆடுறாருயா மனுஷன்... லாரன்ஸ் மாஸ்டரின் லவ்லி டான்ஸ் உடன் வெளியானது பாடாத பாட்டெல்லாம் பாடல் வீடியோ
பொன்னியின் செல்வன் 2 படத்தின் சிறப்பு காட்சிக்கு அரசு அனுமதி அளிக்காததால் இப்படத்தின் வசூல் பாதிக்கப்பட வாய்ப்புள்ளதாக கூறப்பட்டு வந்த நிலையில், தற்போது இப்படத்திற்கு முன்பதிவு மூலம் கிடைத்துள்ள வசூல் பற்றி மாஸ் தகவல் வெளியாகி உள்ளது. அதன்படி பொன்னியின் செல்வன் 2 படத்திற்கான முன்பதிவு வசூல் மட்டும் ரூ.11 கோடியாம். இது முதல் மூன்று நாட்களுக்கான உலகளாவிய வசூல்.
அதிலும் குறிப்பாக தமிழகத்தில் மட்டும் முதல் 3 நாட்களுக்கான முன்பதிவு மூலம் மட்டும் ரூ.6 கோடி வசூலாகி உள்ளதாம். இதன்மூலம் இப்படம் முதல் பாகத்தை விட அதிகளவில் வசூலை வாரிக்குவிக்கப் போகிறது என்பது மட்டும் உறுதியாக தெரிகிறது. இப்படம் ரூ.1000 கோடிக்கு மேல் வசூலிக்கும் என படக்குழு எதிர்பார்த்து காத்திருக்கிறது. அப்படி வசூலித்தால் தமிழ் சினிமாவில் அதிகம் வசூலித்த படங்களின் பட்டியலில் பொன்னியின் செல்வன் 2 நம்பர் ஒன் இடத்தை பிடிக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படியுங்கள்... பொன்னியின் செல்வன் 2 ரிலீசாகும் தியேட்டர்களில் ஐடி ரெய்டு நடத்துனா ரூ.1000 கோடி அள்ளலாம் - பார்த்திபன் நக்கல்