பொன்னியின் செல்வன் 2 திரைப்படம் நாளை திரையரங்குகளில் பிரம்மாண்டமாக ரிலீஸ் ஆக உள்ளது. அப்படத்தின் புரமோஷனுக்காக கடந்த 10 நாட்களாக இந்தியா முழுவதும் சுற்றிவந்த படக்குழு, இன்று சென்னையில் நடைபெற்ற பிரஸ்மீட் மூலம் அதனை முடித்துள்ளது. இன்று சென்னையில் நடந்த பொன்னியின் செல்வன் 2 படத்தின் பிரஸ்மீட்டில் படத்தில் நடித்த ஏராளமான நடிகர்கள் கலந்துகொண்டு பேசினர். குறிப்பாக பார்த்திபன் பேசிய பேச்சு தற்போது வைரலாகி வருகிறது.