பொன்னியின் செல்வன் படத்தில், முக்கியம் வாய்ந்த கதாபாத்திரம் குந்தவை. மிகவும் புத்திசாலிதம் மற்றும் சமயோஜித அறிவு கொண்ட பேரழகி அவர்.
காரணம், 'பொன்னியின் செல்வன்' நாவலில்... குந்தவை என்கிற பெண் ஆளுமை எப்படி இருப்பார்? என கல்கி வர்ணனை செய்து எழுதி இருந்தாரோ... அதே கதாபாத்திரம் கண் முன் தோன்றியது போல் உள்ளதாக ரசிகர்கள் பாலர் தெரிவித்திருந்தனர்.
மேலும் 38 வயதை எட்டிவிட்ட த்ரிஷா, தமிழில் வெற்றி படம் கொடுக்க முடியாமல்... இருந்த நிலையில் பொன்னியின் செல்வன் அவருக்கு மிகப்பெரிய பிரேக்காக அமைந்தது மட்டும் இன்றி, அடுத்தடுத்த பல படங்களின் வாய்ப்புகளையும் பெற்று கொடுத்துள்ளது.
அந்த வகையில், நீண்ட இடைவெளிக்கு பின்னர்... த்ரிஷா நடிகர் விஜய்க்கு ஜோடியாக, இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கி வரும், லியோ படத்தில் ஹீரோயினாக நடித்து வருகிறார்.