இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில்... அவரின் கனவு படமாக உருவாகியுள்ளது, 'பொன்னியின் செல்வன்'. இப்படத்தின் முதல் பாகம் கடந்த ஆண்டு வெளியான நிலையில், இரண்டாம் பாகம் அடுத்த மாதம் ஏப்ரல் 28 ஆம் தேதி வெளியாக உள்ளது.
இதில் தமிழ் திரையுலகை சேர்ந்த மிக முக்கியமான பிரபலங்களான கமல் ஹாசன் கலந்து கொள்வது உறுதியாகியுள்ள நிலையில், ரஜினிகாந்தும் கலந்து கொள்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.
கார்த்தி வந்திய தேவனாகவும் , விக்ரம் ஆதித்த கரிகாலனாகவும் நடித்துள்ளார். மேலும் திரிஷா குந்தவையாகவும், ஐஸ்வர்யா ராய், நந்தினி மற்றும் ஊமை ராணி என இரட்டை கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
இன்னும் சில மணி நேரங்களில், சென்னை நேரு ஸ்டேடியத்தில் 'பொன்னியின் செல்வன் 2' படத்தின் இசை வெளியீட்டு விழா துவக்க உள்ள நிலையில், விழா மேடை வண்ண வண்ண மின் விளக்குகளால் ஜொலிக்க, ரசிகர்களும் ஏகோபித்த எதிர்பார்ப்புகளுடன் விழாவை காண சென்று வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.