சமீபகாலமாக வெள்ளித்திரை மற்றும் சின்னத்திரை நடிகர், நடிகைகளை தாண்டி... தொகுப்பாளர்கள் மற்றும் செய்தி வாசிப்பாளர்களுக்கும் தனி ரசிகர்கள் கூட்டம் உள்ளது. அந்த வகையில் தன்னுடைய அழகாலும் குறுகுறு பார்வையாலும் ரசிகர்கள் மனதை கொள்ளை கொண்டவர் செய்திவாசிப்பாளரான கண்மணி.
இந்நிலையில் கண்மணி கடந்த ஆண்டு, தன்னுடைய காதலரும் இதயத்தை திருடாதே சீரியல் மூலம் பிரபலமான நடிகர் நவீனை பெற்றோர் சம்மதத்துடன் திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்கு பிறகும், தொடர்ந்து செய்தி வாசிப்பாளராக இருந்து வரும் கண்மணி, கர்ப்பமாக இருக்கும் தகவல் கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பு வெளியிட்ட வீடியோ ஒன்றின் மூலம் ரசிகர்களுக்கு தெரியவந்தது.
இந்நிலையில் கண்மணிக்கு மிகவும் பிரமாண்டமாக களைகாப்பு முடிவடைந்துள்ள நிலையில், இதுகுறித்த புகைப்படங்கள் தற்போது வெளியாகி உள்ளது. நடிகர் நவீன், தன்னுடைய காதல் மனைவி கண்மணிக்கு வளைகாப்பு நடைபெறும் மேடை முழுவதையுமே வளையலால் அலங்கரித்து அசத்தியுள்ளார். ரசிகர்கள் கண்மணிக்கு வாழ்த்து கூறி வருவதோடு, உடல் நலனை பார்த்துக்கொள்ளுங்கள் என அக்கறையோடு அட்வைஸ் கொடுத்தும் வருகிறார்கள்.